திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2018 (17:19 IST)

இது சப்போர்ட் செய்யும் நேரம்; கோலிக்கு ஆதரவாக களமிறங்கிய கம்பீர்

தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து இது இந்திய அணிக்கு ஆதரவாக இருக்கும் நேரம் என இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 
இந்திய அணி தென் அப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
 
இதன்மூலம் டெஸ்ட் தொடரை தென் ஆப்பரிக்க வென்றது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணி வீரர்களுக்கு எதிராக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய அணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். 
 
அதில், இது இந்திய அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டிய நேரம். இரண்டு போட்டிகள் அவர்களை மோசமாக்கிவிடாது. வெற்றிக்கான முழு கௌரவும் தென் ஆப்பரிக்கா அணியை சேரும் என்று பதிவிட்டுள்ளார்.