1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (08:25 IST)

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் நிதான ஆட்டம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி
கொரோனா வைரஸ் பரபரப்புக்கு இடையிலும் இங்கிலாந்து அணி மட்டுமே தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, அதன் பின்னர் அயர்லாந்து அணியுடன் டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடியது 
 
இந்த நிலையில் நேற்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது 
 
இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களான ஷான் மசூத் மற்றும் அபித் அலி ஆகியோர் களமிறங்கினர். அபித் அலி 16 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு கேப்டனாக அசார் அலி ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இருப்பினும் ஷான் மசூத் மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவரும் நிதானமான ஆட்டத்தை விளையாடுகின்றனர்
 
நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் ஷான் மசூத் 46 ரன்களும் பாபர் அசாம் 19 ரன்களுடனும் அவுட்டாகாமல் உள்ளனர் என்பதும், முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது