திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 28 மார்ச் 2020 (16:09 IST)

தோனியின் இந்தியக் கனவு முடிந்துவிட்டது –ஹர்ஷா போக்ளே பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி !

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஹர்ஷா போக்ளே தோனி இந்திய அணியில் இனி விளையாடுவது கடினம் என்று தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பைக்குப் பின்  சர்வதேசக் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீண்டும் அணியில் இடம் பிடிக்க வேண்டுமென்றால் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது மட்டுமே ஒரே வாய்ப்பு என சொல்லப்பட்டது. இதை முன்னாள் வீரர் கபில்தேவ் மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர் கபில்தேவ் உள்ளிட்டவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடப்பது சந்தேகமாகியுள்ளது. மேலும் நடந்து அதில் சிறப்பாக அவர் விளையாடினாலும் அணியில் இடம் கிடைப்பது சந்தேகம்தான் என முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். இதுபோல தோனி இந்திய அணியில் இடம் பிடிப்பது குறித்தது பலரும் பலவிதமாக பேசிவரும் நிலையில் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே ‘தோனியின் இந்திய கனவு முடிந்துவிட்டதாக அவர் நினைக்கிறார்.  டி20 உலகக் கோப்பையை தோனி குறிவைக்கவில்லை என நினைக்கிறேன். ஒருவேளை அவருக்கு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தால் அதற்கு வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் அந்த நிலைமை தற்போது கடந்துவிட்டது என நினைக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.