’’தல’’ தோனிக்கு இந்த நிலைமையா ? ரசிகர்கள் தாங்குவார்களா ? முன்னாள் வீரர் கருத்து

Mahendra Singh Dhoni
மஹேந்திர சிங் தோனி
sinoj| Last Updated: வியாழன், 14 மே 2020 (21:28 IST)


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிக ரசிகர்களைக் கொண்டவருமான தோனி, தனது பொறுமை மற்றும் நிதானத்துக்காகவே 'கூல் கேப்டன்' என அழைப்பட்டார்.

சமீபத்தில் நடந்த போட்டியில் அவர் பங்கேற்காத நிலையில் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார் என எதிர்ப்பார்கப்பட்ட நிலையில்,கொரொனா வந்து அனைத்து தொழில்களையும் முடக்கிவிட்டது. ஐபிஎல் போட்டிகள் நடக்காததால் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். ஆனால் அவ்வப்போது, நட்சத்திரங்கள் வெளியிடும் புகைப்படம் , வீடியோ ரசிகர்களுக்கு ஆதரவாக உள்ளது.

இந்நிலையில்,

தோனி கடைசியாக விளையாட்டு உலகக்கோப்பை அரையிறுதி என்பதால் அவர் அதன்பிறகு எந்தப் போட்டியிலும் இடம் பெறவில்லை.

அதேசமயம், தோனி இனிமேல் விளையாட மாட்டார், அவர் விரையில் ஓய்வு பெறப்பெறப்போகிறார் என வதந்திகள் உலவி வருகிறது.

இந்நிலையில் முன்னால் வேகப்பந்து வீச்சாளர் பிரசாத் தோனிகுறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது , தோனி அணியில் இடம்பெற்று ஒரு வருடம் ஆகிறது அதனால் அவர் மீண்டும் அணியில் இடம்பெறுவது கடுன்
என்று கூறியுள்ளார். ஆனால் அவருக்கு 40 வயதை நெருங்கிவிட்டதால் அவர் விளையாடுவதில் சிரம உள்ளது. ஒருவேளை தோனி உடற்தகுதியை நிரூபித்துவிட்டால் அணியில் இடம் பெற்று 3 வது அல்லது 4 வது வீரராக களம் இறங்கி ஆட்டத்தை நிறைவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தோனிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதனால், அவர் இனிமேல் விளையாடாமல் போனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.இதில் மேலும் படிக்கவும் :