முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 237 ரன்கள் இலக்கு கொடுத்த ஆஸ்திரேலியா

Last Modified சனி, 2 மார்ச் 2019 (17:02 IST)
 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று ஐதராபாத்தில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது
 
இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 2வது ஓவரிலேயே பின்ச் விக்கெட்டை இழந்தது. இருப்பினும் காவாஜா பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தாம். அதன் பின் ஸ்டோனிஸ், மாக்ஸ்வெல் ஆகியோர்களின் நிதான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 236 ரன்கள் எடுத்தது
 
இந்திய தரப்பில் ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். ஜாதவ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
 
இந்த நிலையில் 237 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :