வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கா பூஜை!

ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளில் முக்கியமானது துர்க்கை வழிபாடு ஆகும். ராகு கால துர்க்கா பூஜை என்று ஒரு தனி வழிபாட்டு முறையே இருக்கிறது. இதில் விஷேசமானது செவ்வாய்க் கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. இதற்குரிய தெய்வம் மங்கல சண்டிகா.
அஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்களைக் கொண்டு அர்ச்சனை செய்யலாம். மேலும் சிவப்பு வஸ்திரத்தை அம்பாளுக்கு சாத்தியும் வழிபடலாம்.
 
விரதமிருந்து துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சண்டிகை தேவியின் சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும். நல்லெண்ணெய்  வழிபாடும், இந்த சகஸ்ர நாமமும் சக்தி வாய்ந்தவை.
 
துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் ‘துர்கா சப்தசதி’ என்ற 700 ஸ்லோகங்கள் படிப்பது நல்ல மனநிலையை ஏற்படுத்தும். பிறவி என்று வந்து விட்டால் கஷ்டங்கள், துன்பங்கள் வரத்தான் செய்யும். துக்கங்கள் அதிகமாகும். அந்த துக்கத்தைப் போக்குபவளே துர்க்காதேவி.
 
வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறவும், சிறை வாசத்திலிருந்து விடுபடவும் விரதமிருந்து துர்க்காதேவியை சரண் புகுந்தால், வெற்றியும் நிவாரணமும்  சித்திக்கும்.
 
மிகச் சிறிய விஷயத்திலிருந்து, பெரிய பதவி அடைய முயற்சிக்கும் விஷயம் வரை, நினைத்தது நடக்க வேண்டுமானால், துர்க்கையின் திருவடி நிழலைப்  பிரார்த்திப்பதே சிறந்த வழி.