பாவங்களை அகற்றி பிரம்மத்தை உணரவைக்கும் காயத்ரி மந்திரம்...!

காயத்ரி மந்திரத்தை இந்த பூமிக்கு அறிமுகப்படுத்தியவர் விஸ்வாமித்ரர் ஆவார்.அவர் ஆகாயத்தில் சூட்சும ஒலியாக தியான நிலையிலிருந்து இதனைக்  கண்டறிந்தார்.
ஒரு சில அட்சரத்தை (மந்திரத்தை) ஒரே சீரான கதியில் திரும்பத் திரும்பச் சொல்லிட அந்த ஒலி அதிர்வுகள் சக்தியாய் உருமாறி ஜெபிப்பவரின் உடலையும்,  உயிரையும் கவசம் போல காக்கிறது. இதுவே மந்திரங்களின் அடிப்படை தத்துவம். 
 
இத்தகைய மந்திரங்களில் தலையாயதாக கருதப் படுவது காயத்ரி மந்திரம். இதை தொடர்ந்து முறையாக ஜெபித்து வருபவர்களுக்கு நலத்தையும், வளத்தையும் அருளக் கூடியது. மேலும் இவர்களுக்கு எந்த தீங்கும் நேராது என்கிற நம்பிக்கையும் உள்ளது. 
 
காயத்திரி மந்திரத்தை ஜெபிப்பவரின் மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் செய்த பாவங்களை அகற்றி பிரம்மத்தை உணரவைக்கும் என்றும் கூறப் படுகிறது. ஞானத்தின் உயரிய நிலையான பிரம்மத்தையே உணரவைக்கும் வல்லமை கொண்டு விளங்குவதால் இந்த காயத்ரி உபதேசத்தை "பிரம்மோபதேசம்" என்றும்  கூறுகின்றனர்.
 
காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபிப்பவர்களின் அனைத்து ஆசைகளும் உறுதியாக நிறைவேறும்.தினமும் காயத்ரி மந்திரம் ஜபிப்பவர்களுக்கு ‘ஆத்மசுத்தி’ கிடைக்கும். அவர்கள் இவ்வுலகில் வாழும் வரையிலும் அனைத்து சுகங்களையும் அனுபவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :