தீபம் ஏற்ற வேண்டிய எண்ணெய்களும் அதன் பலன்களும்...!!
தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் பூஜை செய்து விளக்கு ஏற்றலாம். இதனை ஆண்கள் செய்ய கூடாது. வீட்டில் உள்ள பெண்கள் செய்தால் சிறப்பாக இருக்கும். மாலை நேரத்தில் வீட்டை சுத்தம் செய்த பிறகு, விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும்.
தீபம் ஏற்றும் பொழுது நெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்ந்து ஏற்றினால் தேவியின் அருள் கிட்டும். அம்மனை வணங்கும் பொழுதும் மேலே கூறிய எண்ணெய் கொண்டு ஏற்றலாம்.
நெய் தீபம் ஏற்றினால் சகலவித மகிழ்ச்சி வீட்டில் ஏற்படும். நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் வீட்டில் உள்ள பீடை, தோஷம் யாவும் நீங்கி விடும். விளக்கெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் பெயர், புகழ், கீர்த்தி உண்டாகும். வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் வீட்டில் செல்வம் சேர்க்கை உண்டாகும். வறுமை நீங்கி சகல சந்தோசம் ஏற்படும்.
பசு நெய்யால் தீபம் ஏற்றினால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும் மற்றும் குடும்பத்தில் நிலவுகின்ற பிரச்சனைகள் தீரும். குலதெய்வத்தின் அருள் பெற ஆமணக்கு எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றலாம்.
குலத்தை காக்கும் குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் நன்மை தரும். வீட்டில் குலதெய்வத்திற்கு விளக்கு ஏற்ற கூடாது, வெளியில் தான் ஏற்ற வேண்டும். எள் (நல்லெண்ணெய் ) தீபம் ஏற்றுவது கிரஹங்களை சாந்தப்படுத்தும்.
கடுகு எண்ணெய், பாமாயில், கடலை எண்ணெய் போன்றவை தீப பூஜை மற்றும் விளக்கேற்றுவதற்கு தவிர்க்க வேண்டியவை ஆகும். ஒருபோதும் இதனை வீட்டில் அல்லது கோவில்களில் ஏற்ற கூடாது. இதனை செய்தால் பல பாவங்கள், தொல்லைகள், துயரங்கள் சந்திக்க நேரிடும்.