வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2017 (18:16 IST)

காலையில் விழித்தவுடன் உள்ளங்கையை பார்க்க வேண்டும்: ஏன் தெரியுமா?

காலையில் விழித்தவுடன் உள்ளங்கையை பார்க்கும் படி வீட்டில் உள்ள பெரியவர்கள் அறிவுறுத்துவதை கேட்டிருப்போம். அவ்வாறு எதற்காக செய்ய வேண்டும் என்பதற்கான ஆன்மீக பதில் இதோ...


 
 
இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். இறை உருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம்.
 
உள்ளங்கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்கிறது. 
 
ஹஸ்தரேகா என்ற சாஸ்திரம் கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற காலையில் எழுந்ததும் உள்ளங்கைகளைப் பார்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இது மட்டுமல்லாமல், 
 
கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி
கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்
 
என்ற ஸ்லோகத்தை காலையில் விழித்தவுடன் உள்ளங்கையை பார்க்கும் போது கூற வேண்டும்.