திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2023 (09:08 IST)

அட்சய திருதியை தங்கம்.. பலகாலம் பெருகும்! – தங்க வாங்க நல்ல நேரம் எது?

Akshaya Tritiyai
நிகழும் சித்திரை 9 மற்றும் 10ம் நாளில் அட்சய திருதியை வரும் நிலையில் எந்த நேரத்தில் பொன் வாங்குவது நல்ல பலனை தரும் என்பதை காண்போம்.

அட்சய திருதியை என்றால் என்ன?

சித்திரை மாதத்தின் வளர்பிறை காலத்தில் வரும் மூன்றாவது திதியானது திருதியை திதி. இந்த திதியில் தான் ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இடம்பெற்றாள். இதே நாளில்தான் அஷ்ட லட்சுமிகளும் தோன்றி சகல சௌபாக்கியங்களையும் அளிக்க தொடங்கினர். செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படும் லட்சுமியின் வடிவமானது ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு லட்சுமிகளும் அஷ்ட லட்சுமிகளாக வணங்கப்படுகின்றனர்.

அட்சய திருதியை ஏன் கொண்டாடப்படுகிறது?

Ashta Lakhmi


இந்த சித்திரை மாதத்தின் மூன்றாவது திதியான திருதியையில் உருவானவர்கள் அஷ்ட லட்சுமிகள் என்பதால் இந்த நன்னாளான அட்சய திருதியையில் பொன், பொருள் வாங்கினால் அது மேலும் மேலும் வளர்ந்து செழிக்கும். அட்சயம் என்பது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தை குறிக்கிறது.

அட்சய திருதியையில் தங்கம்தான் வாங்க வேண்டுமா?

அட்சய திருதியையில் எந்த மங்களகரமான பொருள் வாங்கினாலும் பெருகும். அஷ்ட லட்சுமிகளின் கடாட்ஷமும் கிடைக்கும். அட்ஷய திருதியை அன்று தானியங்கள், உப்பு, மஞ்சள், விளக்கு, வெண்கல மணி, லட்சுமி படம், பணம், குங்குமச்சிமிழ், சந்தனம், சர்க்கரை போன்ற மங்களகரமான பொருள் எதையும் வாங்கலாம்.

தங்கம் குருவையும், வெள்ளி சுக்கிரனையும் குறிப்பவை. இவர்கள் இருவர் அருளும் தொடர்ந்து நீடித்தால் வீட்டில் செல்வம் பல்கி பெருகும் என்பதும் தங்கம், வெள்ளி வாங்க முக்கிய காரணங்கள்.

எந்த நேரத்தில் அட்சய திருதியை தங்கம், வெள்ளி வாங்கலாம்?

Gold


சித்திரை 9 (ஏப்ரல் 22)ல் அட்ஷய திருதியை என்று குரு ஓரை காலமான காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரையிலும் தங்கம், வெள்ளி பொருட்கள் வாங்கலாம். சுக்கிர ஓரை காலமான காலை 10-11, மாலை 5-6 மணி வரையிலும் தங்கம், வெள்ளி வாங்கலாம்.

சித்திரை 10 (ஏப்ரல் 23)ல் காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், பின்னர் 11 மணி முதல் 12 மணி வரையிலும் தங்கம், வெள்ளி பொருட்கள், நகைகள் வாங்கலாம். தங்கம், வெள்ளி வாங்க முடியாதவர்கள் மேலே சொன்ன மங்களகரமான பொருட்களையும் வாங்கி வைக்கலாம்.