இந்த கோயிலைச் சுற்றி இருக்கும் சுவர்களில் இந்து மற்றும் ஜைன மதங்களைப் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் படித்தவர் நிச்சயம் மோட்சத்தை அடைவார் என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களிலும், சங்கராந்தி, சிவராத்திரி நாட்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் நர்மதையில் புனித நீராடிவிட்டு கோயிலுக்கு வந்து இறைவனை தரிசிக்கின்றனர்.
கடந்த 10 மற்றும் 11ஆம் நூற்றாண்டுகளில் இந்த கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலை ஒட்டியுள்ள சுவர்களில் அழகான சிற்பங்களும் உள்ளன. கோயிலுக்குள் உள்ள தூண்களிலும், சுவர்களிலும் சிவன், பைரவ், கணேஷ், சாமுண்டா, இந்திரா மற்றும் பல்வேறு வகையான இறை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
எல்லா நாட்களிலும் மிகவும் ரம்மியமாகக் காட்சி அளிக்கும் இயற்கை சூழலின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு வருவோரது காதுகளில் நர்மதை நதி ஆர்ப்பரிக்கும் சப்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும்.
எப்படிச் செல்வது :
சாலை மார்கம் : இந்தூரில் இருந்து 130 கிலோ மீட்டரிலும், போபாலில் இருந்து 170 கிலோ மீட்டரிலும் அமைந்துள்ளது ஹேமாவர்.
ரயில் மார்கம் : டெல்லி - மும்பை செல்லும் வழியில் ஹர்தா ரயில் நிலையத்தில் இறங்கி 15 கி.மீ. கோயிலை அடையலாம். |