முதன்மை பக்கம் > ஆன்மிகம் > புனிதப் பயணம் > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஸ்ரீ ஜெகதாம்பா மாதா!
- தீபக் கண்டாகிளே
இக்கோயிலிற்கு அருகில் ஒரு சிவன் கோயிலுன் உள்ளது. அக்கோயிலை ஒட்டியுள்ள குளத்தில்
webdunia photoWD
நீராடிவிட்டுத்தான் இக்கோயிலிற்கு பக்தர்கள் வருகின்றனர்.ஸ்ரீ ஜெகதாம்பா மாதாவின் கருணையை இங்கு வரும் பக்தர்கள் ஒவ்வொருவரும் பெருமையுடன் கூறுவதைக் கேட்கலாம்.


இக்கோயிலிற்கு அருகே அணை ஒன்று கட்டப்படுவதற்காக நடந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமராக இருந்தபோது இந்திரா காந்தி வந்திருந்தார். மறுநாள் விழா நடைபெறயிருந்த நிலையில் அன்று இரவு அவருடைய கனவில் ஸ்ரீ ஜெகதாம்பா மாதா தோன்ற, மறுநாள் இக்கோயிலிற்கு வந்த இந்திரா காந்தி, குன்றின் மீது பக்தர்கள் சுலபமாக ஏறிச்செல்ல வசதியாக படிகளைக் கட்டுமாறு உத்தரவிட்டுவிட்டுச் சென்றார்.

ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சக்கணக்கில் பக்தர்கள் வரும் இக்கோயிலை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறிய இக்கோயிலின் அறங்காவலர் குழுவின் தலைவர் சுரேஷ் பாலசந்திரா, அதற்கு 15 கோடி செலவாகும் என்று கூறினார். இக்கோயிலைச் சுற்றி இருபது ஆயிரம் மூலிகைச் செடிகளும், மற்றத் தாவரங்களும் வளர்க்கப்படுகின்றன.

இத்தலத்திற்குச் செல்வது எப்படி:

இரயில் மார்கம்: அஹமதுநகர் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இரயில் மூலமாக அடையும்
webdunia photoWD
பாதையில் உள்ளது. சென்னையில் இருந்து செல்வோர் மும்பை மார்கத்தில் பயணித்து பூனாவிற்கு முன் வரும் டோண்ட் (
Daund) என்ற இரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சிர்டி செல்லும் வழியில் சென்று அஹமத்நகர் செல்லலாம்.அங்கிருந்து மோஹாதே 70 கி.மீ. தூரத்திலுள்ளது.

விமான மார்கம்: பூனா விமான நிலையத்திலிருந்து 180 கி.மீ. தூரத்திலுள்ளது அஹமத்நகர்.

சாலை மார்கம்: இக்கோயில் அமைந்துள்ள மொஹாதே, அஹமத்நகரிலிருந்து 70 கி.மீ. தூரத்திலுள்ளது.
வீடியோவைப் பாருங்கள்
<< 1 | 2 
புகைப்படத்தில்
ஸ்ரீ ஜெகதாம்பா மாதா!
மேலும்
நோய்கள் அனைத்தையும் தீர்க்கும் வைத்தியநாத சுவாமி!
கந்த்வாவில் உள்ள பவானி மாதா கோயில்!  
யோகே‌ந்‌திர ‌ஷி‌ல்நா‌த் பாபா!  
தாதாஜி தூனிவாலே  
துறவி சிங்காஜியின் கோயில!  
ஸ்ரீ ல‌ட்சு‌மி நர‌சி‌ம்மா ச‌ந்தனோ‌ட்சவ‌ம்!