முதன்மை பக்கம் > ஆன்மிகம் > புனிதப் பயணம் > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஸ்ரீ ஜெகதாம்பா மாதா!  Search similar articles
- தீபக் கண்டாகிளே
இந்த வார புனித பயணத்தில் மராட்டிய மாநிலத்திலுள்ள மிகப் புகழ் பெற்ற ஒரு திருத்தலத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறோம். இம்மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அஹமத்நகருக்கு
webdunia photoWD
அருகே மொஹாதே என்ற இடத்தில் உள்ளது ஸ்ரீ ஜெகதாம்பா மாதா கோயில். இக்கோயிலில் வந்து மாதாவை வழிபடுபவர்கள் நினைத்து நிறைவேறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.


இத்திருக்கோயில் இங்கு வந்ததற்கு ஒரு பக்தரே காரணமாக இருந்துள்ளார். அவர் பெயர் பன்சி தாஹிஃபாலே. இவர் மாஹூர்கார் என்ற இடத்திலுள்ள ரேணுகா மாதாவின் தீவிர பக்தர்.

நமது நாட்டிலுள்ள சக்தி பீடங்களில் ஒன்றான மாஹூர்காருக்கு அடிக்கடி சென்று வழிபட்டுவந்த பன்சி தாஹிபாலே, தனது கிராமத்திற்கு வருமாறு மாதாவை வேண்ட, அந்த வேண்டுதலை நிறைவேற்ற அவருடைய கனவில் தோன்றிய ரேணுகா மாதா, அக்கிராமத்திற்கு அருகிலுள்ள குன்றின் உச்சில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து வழிபடுமாறு கூற, அவ்விடத்தில்தான் இப்பொழுது நாம் காணும் இக்கோயில் உள்ளது.

webdunia photoWD
மாஹூர்கார் ரேணுகா மாதாவின் மறுவடிவமாக ஸ்ரீ ஜெகதாம்பா மாதா திகழ்கிறார். குரு விரிதேஷ்வர், மச்சேந்திர நாத், கானிஃப் நாத், காஹி நாத் ஜாலிங்கர் நாத், நாக நாத் என்று பல குருக்கள் இத்திருத்தலத்திற்கு வந்து மாதாவை வணங்கியுள்ளனர்.

இத்திருத்தலத்திற்கு அஸ்வினி சுதி ஏகாதசியன்று ஸ்ரீ ஜெகதாம்பா மாதா எழுந்தருளியதால் அந்த நாளில்தான் இங்கு திருவிழா நடைபெறுகிறது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஜெகதாம்பா மாதா - தான் இருந்த மாஹூர்காரை நோக்கி பார்த்தப்படி உள்ளார்.
வீடியோவைப் பாருங்கள்
1 | 2  >>  
புகைப்படத்தில்
ஸ்ரீ ஜெகதாம்பா மாதா!
மேலும்
நோய்கள் அனைத்தையும் தீர்க்கும் வைத்தியநாத சுவாமி!
கந்த்வாவில் உள்ள பவானி மாதா கோயில்!  
யோகே‌ந்‌திர ‌ஷி‌ல்நா‌த் பாபா!  
தாதாஜி தூனிவாலே  
துறவி சிங்காஜியின் கோயில!  
ஸ்ரீ ல‌ட்சு‌மி நர‌சி‌ம்மா ச‌ந்தனோ‌ட்சவ‌ம்!