இந்த வார புனிதப் பயணம் தொடரில், துறவி சிங்காஜி மஹாராஜ் கோயிலை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.
சிங்கஜி மஹாராஜ் கோயில், மத்தியப்பிரதேசத்தின் கந்தாவாவில் இருந்து 35 கி.மீ. தொலைவில் இருக்கும் பிப்லியா என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது.
குவாலி சமூகத்தில் பிறந்த சிங்காஜி, எளிமையாகவும், நேர்மையானவராகவும் வாழ்ந்தார். மன்ரங் சுவாமிகளின் சொற்பொழிவை கேட்ட சிங்காஜியின் வாழ்க்கைப் பாதை ஆன்மீக வழியில் மாறியது.
துறவியான கபீரின் சீடரான இவர், உருவமற்ற வழிபாட்டை மேற்கொண்ட சிங்காஜி, கோயில்களுக்குச் செல்வதையும், விரதங்கள் மேற்கொள்வதையும் ஏற்கவில்லை. தூய உள்ளங்களில் இறைவன் வாழ்வதாகவே அவர் நம்பினார். ஒவ்வொருவரும் தங்களை அறிந்து கொள்வதே இறைவனை சேர்வதற்கான வழியாகும் என்று கூறினார். இவரது காலத்தில் பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டார்.
இவர் வாழ்நாள் முழுவதும் எந்த கோயிலையும் எழுப்பவில்லை. நாம் நல்ல வழியில் சென்றால் எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் நம்மை ஆசிர்வதிப்பார் என்று அவர் கூறுவார்.
|