மராட்டிய மாநிலம் நாசிக் நகருக்கு அருகே உள்ள ஒரு புனிதத் தலம் மிகவும் புகழ்பெற்றது என்பது மட்டுமின்றி, அந்த தலம் இருக்கும் கிராமம் ஒரு ஆச்சரியத்தையும் பன்னெடுங்காலமாக நமக்கு அளித்தக் கொண்டிருக்கிறது.
நாசிக் மாவட்டம் ஷிங்காபுரில் உள்ள சனி பகவான் திருக்கோயில் மிகப் புகழ்பெற்றது.
அதைவிட சிறப்பானது இந்தக் கோயில் அமைந்துள்ள கிராமத்தில் ஒரு வீட்டிற்குக் கூட தாழ்பாளும் கிடையாது. அவர்கள் பூட்டுவதும் இல்லை. ஏனென்று கேட்டால் எங்களை எல்லாம் சனி பகவானே காக்கின்றார். அதனால் பூட்ட வேண்டிய அவசியம் இல்லை. யாரும் திருடவும் முடியாது, திருடியவர்கள் உயிரோடு இருக்கவும் மாட்டார்கள்.இது இன்று நேற்றல்ல, பன்னெடுங்காலமாக பழக்கத்தில் இருந்து வருகிறது.
இந்த கோயிலுக்குள், மற்ற கோயில்களுக்குள் இருப்பது போல கருவறையில் அந்த கோயிலுக்குரிய கடவுள் இங்கு இல்லை. இது மற்றொரு ஆச்சரியமாகும். அங்கு கல் ஒன்று மட்டுமே உள்ளது. அந்த தூண்தான் சனீஸ்வரர் என்று மிக பக்தியுடன் வழிபடப்படுகிறார்.
இந்த கோயிலுக்குள் வரும் ஆண்கள் அனைவரும் அருகில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு, காவி உடை தரித்து கோயிலுக்குள் செல்ல வேண்டும். இங்கு பிரதக்ஷன முறையில் பூஜை செய்யப்படுகிறது. அதாவது கடவுளை வழிபட வரும் பக்தர்கள் பிரார்த்தனை அல்லது மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு கோயிலை பல முறை சுற்றி வர வேண்டும்.
இது மட்டுமின்றி சில நேரங்களில் அபிஷேகமும் நடைபெறுவதுண்டு. எண்ணெயையும், தண்ணீரையும் அபிஷேகத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.
|