முதன்மை பக்கம் > ஆன்மிகம் > புனிதப் பயணம் > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சமண‌ர்க‌ளி‌ன் ‌சி‌த்தா ஷே‌த்ரா பாவ‌‌ங்கஜா!
மலை உ‌ச்‌சி‌யி‌ல் அமை‌ந்‌திரு‌க்கு‌ம் இ‌க்கோ‌வி‌ல் ‌சி‌த்தா பூ‌மி எ‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறது. இ‌ங்கு‌ள்ள பாவ‌ங்கஜா ‌சிலை கடவு‌ள் ஆ‌திநா‌த் எ‌ன்று அ‌றிய‌ப்ப‌ட்டு வண‌ங்க‌ப்படு‌கிறது.

மகா ம‌ஸ்‌‌ட்டகா‌பிஷேக‌ம் :

webdunia photoWD
பாவ‌ங்கஜா‌வி‌ன் கடவு‌ள் ஆ‌திநா‌த்‌தி‌‌ன் மஹா ம‌ஸ்‌ட்டகா‌பிஷேக‌ம் 17 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பிறகு நட‌ந்தது. இது 2008 ஆ‌ம் ஆ‌ண்டு ஜனவ‌ரி 20 முத‌ல் ‌பி‌ப்ரவ‌ரி 04 வரை ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்தது. ‌விழா‌க் கால‌த்‌தி‌ல் ல‌ட்ச‌க்கண‌க்கான ப‌க்த‌ர்க‌ள் பாவ‌ங்கஜா‌‌வி‌ற்கு வ‌ந்து பு‌னிதமான தருண‌ங்களை ர‌சி‌த்தன‌ர்.

மஹா ம‌ஸ்‌ட்டகா‌பிஷேக‌த்‌தி‌ற்கு த‌ண்‌ணீ‌ர், பா‌ல், கு‌ங்கும‌ம் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது. து‌க்தா‌பிஷேக‌த்‌தி‌ல் கடவு‌ளி‌ன் தலை‌யி‌லிரு‌ந்து பாத‌ம் நோ‌க்‌கி‌ப் பாலை ஊ‌ற்று‌ம்போது, கூடி ‌நி‌ற்கு‌ம் ல‌ட்ச‌க்கண‌க்கான ப‌க்த‌ர்களு‌ம் ம‌கி‌ழ்‌ச்‌சி ஆரவார‌த்துட‌ன் ஆடி‌ப்பாடி ஆ‌ர்‌ப்ப‌ரி‌க்‌கி‌ன்றன‌ர். அதேநேர‌த்‌தி‌ல் கு‌ங்கும‌ம் ‌சிலை‌யி‌ன் ‌நிற‌த்தை பழு‌ப்‌பி‌லிரு‌ந்து கா‌வியாக மா‌ற்று‌கை‌யி‌ல் ப‌க்த‌ர்க‌ளி‌ன் பரவச‌ம் உ‌ச்ச‌த்தை அடை‌கிறது.

பாவ‌ங்கஜா‌வி‌ன் பளபள‌ப்பான கா‌வியை‌க் கா‌ண்பத‌ற்காகவே ‌திர‌ண்டு வ‌ந்து, அது ‌நிறைவே‌றியவுட‌ன் ப‌க்த‌ர்க‌ள் எழு‌ப்பு‌ம் ம‌கி‌ழ்‌ச்‌சி ஆரவார‌த்தை காண‌க்காண‌த் ‌திக‌ட்டுவ‌தி‌ல்லை. ப‌க்‌தி, பரவச‌ம் ம‌ற்று‌ம் உ‌ண்மையை‌த் தேடி அவ‌ர்க‌ள் ஓடு‌கி‌ன்றன‌ர்.

இ‌வ்‌விழா‌வி‌ல் பழ‌ங்குடி‌யினரு‌ம், மலைவா‌ழ் ம‌க்களு‌ம் ‌திரளாக‌ப் ப‌ங்கே‌ற்‌கி‌ன்றன‌ர். அவ‌‌ர்க‌ள் த‌ங்க‌ள் ‌வீ‌ட்டு‌ப் பெ‌ண்க‌ள், குழ‌ந்தைகளுட‌ன் இ‌த்‌திரு‌விழாவை மலை முகடுக‌ளி‌ல் ‌நி‌ன்று ர‌சி‌க்‌கி‌ன்றன‌ர்.

webdunia photoWD
அழகு: ப‌ர்வா‌னி‌யி‌ல் இரு‌ந்து பாவ‌ங்கஜா‌வி‌ற்கு‌ச் செ‌ல்லு‌ம் மலை‌ப் பாதை வளைவுக‌ள் ‌நிறை‌ந்தது. மழை‌க் கால‌த்‌தி‌ல் கூட ‌சி‌றிது இடையூ‌ரி‌ன்‌றி வன‌ப்புட‌‌ன் ந‌ம்மை வரவே‌ற்‌கிறது. சா‌த்பூரா மலைக‌ளி‌ன் அழ‌கி‌ல் த‌ங்க‌ள் மனதை‌ப் ப‌றிகொடு‌த்த சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் பாவ‌ங்கஜா‌வி‌ற்கு வரு‌கி‌ன்றன‌ர். மா‌நில அரசு கூட அ‌ண்மை‌யி‌ல் பாவ‌ங்ஜாவை ப‌‌க்‌தி‌ச் சு‌ற்றுலா‌த் தளமாக அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

எ‌ப்படி‌ அடைவது : இ‌த்‌திரு‌த்தல‌‌த்‌தி‌ற்கு இ‌ந்தூ‌ர் (155 ‌கி.‌மீ) ம‌ற்று‌ம் க‌‌ண்‌ட்வா‌வி‌ல் (180 ‌கி.‌மீ) இரு‌ந்து பேரு‌ந்து அல்லது கா‌ரி‌ல் செ‌‌ல்ல முடியு‌ம்.

அரு‌கி‌ல் உ‌ள்ள ‌விமான ‌நிலைய‌ம்: தே‌வி அக‌ல்யா ‌விமான ‌நிலைய‌ம், இ‌ந்தூ‌ர் (155 ‌கி.‌மீ)

அரு‌கி‌ல் உ‌ள்ள ர‌யி‌ல் ‌நிலைய‌ம்: இ‌ந்தூ‌ர், க‌ண்‌ட்வ

எ‌ங்கு த‌ங்குவது : ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல் 50 அறைகளை‌க் கொ‌ண்ட 6 த‌ர்மசாலா‌க்க‌ள் உ‌ள்ளன. பாவ‌ங்கஜா‌வி‌ல் இரு‌ந்து 8 ‌கி.‌மீ தொலை‌வி‌ல் உ‌ள்ள ப‌ர்வா‌னி‌யி‌ல் அனைவரு‌க்கு‌ம் ஏ‌ற்ற வாடகை ‌விடு‌திக‌ள் உ‌ள்ளன.
வீடியோவைப் பாருங்கள்
<< 1 | 2 
புகைப்படத்தில்
சமண‌ர்க‌ளி‌ன் ‌சி‌த்தா ஷே‌த்ரா பாவ‌‌ங்கஜா!
மேலும்
ஷிர்டி சாய் பாபா!  
மோகன்கேடா - சமணர்களின் புன்னியத்தலம்!  
சுவாமி ஐயப்பனின் புனித திருஆபரண ஊர்வலம்!  
புனித கையிலாய மலையும், மானசரோவர் ஏரியும்!  
செருதலை பு‌னித அமலோ‌ற்பவ மாதா ஆலய‌‌ம்!  
தாஜூல் மஸ்ஜித் மசூதிகளுக்கெல்லாம் கீரிடம் போன்றது!