சம்சார சாஹரம் என்றழைக்கப்படும் இவ்வுலக வாழ்க்கையைத் துறந்து பேரின்பத்தை எய்துவதற்கு புனித யாத்திரையே ஒரே வழி என்று கூறுவர். நமது ரிஷிகள் இரண்டு விதமான புனித யாத்திரைகளைக் கூறுகின்றனர். ஒன்று ஜின் அகம். அதாவது, நமக்குள் உள்ளாழ்ந்து செல்வது அல்லது இறை உருவங்கள் மீது கவனத்தை வைத்து தியானிப்பது. இரண்டாவது புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்வது.
முனிவர்கள், சிரார்த்தர்கள் ஆகியோர் சம்பிரதாயங்களின் படி ஜென்கம் தீர்த்தகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். நாம் புனித யாத்திரை மேற்கொள்ளும் போது தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றது.
இப்படிப்பட்ட புனித யாத்திரைகளுக்கு ஏராளமான வாய்ப்புள்ள நமது நாட்டில் உள்ள புனிதத் தலங்களில் ஜைனர்களின் புனிதத் தலமான மோகன்கேடா தீர்த்தமும் ஒன்று.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்லும் தேச நெடுஞ்சாலையில் தார் என்ற நகரத்தில் இருந்து 47 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தப் புனிதத் தலம். இதனை 1940 ஆம் ஆண்டு வாக்கில் ஜைன மத குருவான பூஜ்ஜிய குருதேவ் ஸ்ரீராஜேந்திர சுரிசொர்ஜி மகராஜ் சாகாப் என்பவர் நிறுவினார். இப்புன்னியத் தலத்தில் 16 அடி உயரமுடைய பகவான் ஆதீஸ்வரர் பத்மாசனத்தில் அமர்ந்துள்ள சிலையும், ஸ்ரீராஜேந்திர சுரிசொர்ஜி, ஸ்ரீயத்தீந்ரா சுரிசொர்ஜி, ஸ்ரீ வித்யாசந்திர சுரிசொர்ஜி மகராஜ் சகாப் ஆகியோரின் புனித சமாதிகளும் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகைத் திங்களில் அமாவாசையில் இருந்து பெளர்ணமி வரையிலான 15 நாட்கள் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. அதேபோல, சித்திரை மாதத்திலும், பிறகு நாம் தை என்று அழைக்கும் மாதத்திலும் விழா நடைபெறுகிறது. அந்த விழா வரும் 15 ஆம் தேதி துவங்குகிறது.
மால்வா என்ற இடத்தில் அமைந்துள்ள இந்தப் புனிதத் தலத்தில்தான் ஜைன மத முனிவர்களான தாதா குருதியோ பிரபுத் ஸ்ரீமத் விஜய் ராஜேந்திர சுரிசொர்ஜி வாழ்ந்து, தவமிருந்து பிரசங்கம் செய்த இடமாகும். இவர்தான் ராஜ்காருக்கு மேற்கே சத்ருன்சயின் அவதாரமான ரிஷாப் தியோஜியின் ஜைன ஆலயத்தை நிறுவினார். இந்த இடத்திற்கு அருகில்தான் கேடா என்ற உள்ளது. இங்கு வாழ்பவர்களை பஞ்சாராஸ் என்றழைக்கின்றனர்.
புனித குருதியோ சுரிசொர்ஜி இந்த இடத்தை கடந்துகொண்டிருந்த போதுதான் திடீரென்று அவருடைய கால்கள் நின்றன. தனது தியான சக்தியின் மூலம் எதிர்காலத்தை உணர்ந்த அந்த மகான், இந்த இடத்தில் ஒரு புனித ஆலயத்தை நிறுவ வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் என்பதைக் கண்டார்.
|