முதன்மை பக்கம்  ஆன்மிகம் > புனிதப் பயணம் > கட்டுரைகள்
 
மும்பை சித்தி விநாயகர் ஆலயம்!
Webdunia
சிவபெருமானின் மகன் விநாயகர் பலர் வழிபடும் ஒரு கடவுள். பக்தி சிரத்தையுடன் எழுப்பப்பட்டு எண்ணற்ற பக்தர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் நாம் வணங்கும் ஒரு தெய்வம் விநாயகர்.

webdunia photoWD
ஸ்ரீ சித்தி விநாயகர் விக்ரகம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. இது சுமார் 750 மி.ீ. அல்லது 2 அடி 6 அங்குலம் உயரமும், 2 அடி (600 மி.ீ.) அகலமும் உடையது. இந்த விநாயகர் விக்ரகத்தின் தனிச் சிறப்பு என்னவெனில் வழக்கமாக எல்லா விநாயகர் விக்ரகத்திலும் தும்பிக்கை இடது புறமாக வளைந்திருக்கும், இதில் வலது புறமாக வளைந்திருக்கும் என்பதே. இது வழக்கத்துக்கு மாறான ஒரு விநாயகர் விக்ரகம் என்றால் மிகையாகாது.

மேல் வலது கையில் தாமரையும், இடது கையில் கோடரியும் இந்த விநாயகர் விக்ரஹம் தாங்கி நிற்கிறது. கீழ் வலது கையில் ஜப மாலையும், இடது கையில் ஒரு கிண்ணம் முழுதும் "மோதகமும்" உள்ளது. வலது தோளிலிருந்து இடது வயிறு வரை பூனூலை ஒத்த ஒரு பாம்பு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றையும் விட விசித்திரகமாக இந்த விநாயகருக்கு நெற்றிக்கண் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வினாயகர் விக்ரஹத்தின் இருபுறமும் ரித்தி மற்றும் சித்தி என்ற இரண்டு பெண் தெய்வங்களின் விக்ரஹங்கள் காணப்படும். விநாயகர் விக்ரகத்திலிருந்து பின்புறமாக முளைத்து வருவது போன்ற தோற்றத்தில் ரித்தி மற்றும் சித்தி விக்ரகங்கள் இருக்கும். இந்த இரண்டு பெண் தெய்வங்களுடன் விநாயகர் காட்சியளிப்பதால் இந்தக் கோயில் சித்தி விநாயகர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. ரித்தி மற்றும் சித்தி என்ற பெண் தெய்வங்கள் தூமை, வெற்றி, செல்வச் செழிப்பு மற்றும் வளமான வாழ்வு ஆகியவற்றை குறிக்கின்றனர்.
வீடியோவைப் பாருங்கள்
  1 | 2 | 3  >> 
புகைப்பட கேலரி
சித்தி விநாயகர் கோயில்!
மேலும்
நாகசந்த்ரேஸ்வரர் கோயில் - உஜ்ஜைன்
திரியாம்பகேஸ்வரர்!
ஸ்ரீ ஓம்காரேஸ்வரர்!
மங்கள்நாத் கோயில்!
மஹாகாளீஸ்வரர் : 12 ஜோதி லிங்கங்களில் ஒன்று!