டாரட் | இந்து | கிறித்துவம் | இஸ்லாம் | மற்றவை | பஞ்சாங்கம் | பண்டிகைகள் | கட்டுரைகள் | செய்திகள் | தலங்கள் | அருளுரை | பொ‌ன்மொ‌ழிக‌ள் | ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி
முதன்மை பக்கம் » ஆன்மிகம் » ஆன்மிகம் » அருளுரை » விமர்சனம் செய்வது முட்டாள்களின் வேலை - பரமஹம்ஸ நித்யானந்தர் (Paramahamsa Nithyananthar Speach)
Feedback Print Bookmark and Share
 
நாம் எல்லோருமே நமக்குள்ளே இருக்கிற தாழ்வு மனப்பான்மையை மறைப்பதற்கு முயற்சி செய்கின்றோம். எங்கு சென்றாலும், நம்முடைய அடையாளத்தை நிரூபிக்க முயற்சி செய்கின்றோம்.

ஒரு மனிதர் வந்து, "என்னை இந்தக் கிராமமே முட்டாள், முட்டாளென்று சொல்கின்றது. நீங்கள் எப்படியாவது இதிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்" என்று சொன்னார்.

ஞானி கேட்டார் : "கிராமம் முட்டாள் என்று சொன்னால், அதற்கென்னப்பா? அதைப்பற்றிக் கவலைப்படாதே".

இவர் சொன்னார் : "இல்லை, இல்லை சாமி, எல்லோரும் சொல்லிச் சொல்லி, இப்போது நானுமே அதை நம்ப ஆரம்பித்துவிட்டேன். எப்படியாவது காப்பாற்றுங்கள்".

அவர் மிகவும் அழகாகச் சொன்னார் : "ஒரே வாரத்தில் இந்தக் கிராமமே உன்னை புத்திசாலி என்று சொல்ல ஆரம்பித்துவிடும். நான் சொல்வது ஒன்றை மட்டும் செய்" என்றார்.

இந்த மனிதருக்கு ஒரே ஆச்சரியம். "ஒரே வாரத்தில் மாற்றிவிடுவீர்களா? அப்படியென்றால், என்ன சொன்னாலும் செய்கிறேன். தயவு செய்து சொல்லுங்கள்".

அதற்கு அவர் சொன்னார் : "எதைப் பார்த்தாலும் விமர்சனம் செய்".

எதையுமே ஏற்றுக்கொள்ளாதே.

யாராவது ஒருவர் உட்கார்ந்து, "என்ன அழகான ரோஜா!" என்று சொன்னால், "ஹா!, இதில் என்ன இருக்கிறது? இது என்ன பெரிய அழகு, இதில் எத்தனை முள் பார்த்தாயா?" என்று சொல்.

இல்லை யாராவது ஒருவர், "என்னப்பா ரோஜா இது? இவ்வளவு முள்ளாய் இருக்கிறது?" என்று சொன்னால், "முள்ளை ஏன் பார்க்கிறாய்? இவ்வளவு பெரிய பூ இருக்கே! அதைப்பார்" என்று சொல்.

யாராவது ஒருவர், "என்ன அழகான நிலா!" என்று சொன்னால், "ச்சே! என்ன பெரிய நிலா. நடுவில் பார் கறுப்பு கறுப்பாக இருக்கிறது. களங்கமெல்லாம் இருக்கிறது. ஒளி மாதிரி, சூரியன் மாதிரியாகவா இருக்கிறது? நடுவில் ஏகப்பட்ட களங்கம் இருக்கிறது" என்று சொல்.

யாராவது ஒருவர், "அழகான வெள்ளை வேட்டி!" என்று சொன்னால், "வெள்ளை பெரிய நிறமா? சிவப்பு எவ்வளவு அழகாய் இருக்கும். இதென்ன பெரிய வெள்ளை? வேலையில்லாதவன் கட்டுகின்ற துணி" என்று எதையாவது ஒன்றைப் பிடித்துத் தொடர்ந்து விமர்சனம் செய்யத் துவங்கு.

எதையாவது ஒன்றைப் பற்றி குற்றம் கண்டுபிடிக்கத் துவங்கு.

"யார் என்ன சொன்னாலும், ஒரு வாரத்திற்கு விமர்சனம் செய்" என்று சொல்லிவிட்டு, அந்த ஞானி அவருடைய யாத்திரையைத் தொடர்ந்தார். யாத்திரையை முடித்துத் திரும்பி ஒரு வாரம் கழித்து அந்த ஞானி வந்தார்.

தூரத்தில் இருந்து பார்க்கும்போதே, ஒரு பெரிய வேப்பமரம் தெரிந்தது. அந்த மரத்திற்குக் கீழ் ஊர் பஞ்சாயத்துக் கூடுகிற இடத்தில், இந்த முட்டாளாகக் கருதப்பட்ட அந்த மனிதர், ஊர் சபையில் ஆசனத்தில் உட்கார்ந்திருந்தார்.

சுற்றிலும் அந்த ஊர்ப் பெரியவர்கள், அமைதியாக நின்றுக் கொண்டிருந்தார்கள்.

அதுவரை, அவரை "முட்டாள்!, முட்டாள்!" என்று சொல்லிக் கொண்டிருந்த அந்த ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் இவர் சொல்வதை மிகவும் பவ்யமாக, மரியாதையோடு அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த ஞானி வேக வேகமாக அந்தக் கூட்டத்திற்குள் வந்தார். வந்தவுடனே, அந்தப் பழைய முன்னாள் முட்டாளைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார். "நான் உங்களோடு பேசலாமா?" என்று ஊர் ஊர்ப் பெரியவர்களின் நடுவேயிருந்த முன்னாள் முட்டாளைக் கேட்கிறார்.

உடனே அவர், "கொஞ்ச நேரம் காத்திருங்கள். பிறகு வேண்டுமானால் பார்க்கலாம். நான் முதலில் இவர்களையெல்லாம் பார்த்துவிட்டு, கடைசியாக உங்களைப் பார்க்கிறேன்" என்று சொன்னார்.

பார்க்க வேண்டியவர்களை எல்லாம் பார்த்து முடித்தார். ஊர்ப் பெரியவர்களும் போய்விட்டார்கள். போனவுடனே, இந்த முன்னாள் முட்டாள் நேராய் வந்து இந்த ஞானியினுடைய காலில் விழுந்தான்.

ஞானி கேட்டார் : "என்னப்பா நடந்தது? எனக்கே ஒன்றும் புரியவில்லை. எப்படி இப்படி எல்லாம் தலைகீழானது?" என்று கேட்டார்.
 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்