முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > அருளுரை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பக்தியோகம் - ஸ்ரீ அரவிந்தர்
இந்த ஆன்மப்பான்மை வளரும் போதே பக்தனுடைய மதம் யோகம் ஆகிறது. இறைவனுடன் தொடர்பு அதிகரிக்கிறது, ஐக்கியம் ஏற்படுகிறது.

அப்படியென்றால் அவன் புறவழிபாட்டை விட்டுவிடுவான், விட்டுவிட வேண்டும் என்று அர்த்தமல்ல. புறவழிபாடு இப்பொழுது உள்ளத்திலுள்ள பக்தியின் வெளி அடையாளமாகவே, அது வெளியே பொங்கி வருவதாகவே, ஆன்மாவின் அலை பேச்சாகவும், பொருள் பொதிந்த செய்கையாகவும் புறத்தே வீசுவதாகவே இருக்கும்.

வழிபாடு ஆழ்ந்த பக்தியோகத்தில் ஓர் அம்சமாக வேண்டுமானால் வழிபாட்டுடன் ஜீவனை மென்மேலும் இறைவனுக்கு நிவேதித்தலும் சேர வேண்டும். இந்த நிவேதத்தின் ஓரம்சம் தன்னைத் தூய்மை செய்தலாகும். அப்பொழுதுதான் இறைவனுடைய தொடர்பு ஏற்படுவதற்கு, இறைவன் நமது அகக் கோவிலுள் புகுவதற்கு அல்லது இதய ஆலயத்தில் அவன் தன்னை நமக்கு வெளிப்படுத்திக் கொள்வதற்கு நாம் தகுதி பெறுவோம்.

இந்தத் தூய்மை செய்தலானது சன்மார்க்க ரீதியாகவோ அல்லது சமயங்களில் கடவுளின் கட்டளைகளாகக் கூறப்படும் விதிகளுக்குக் கீழ்படிந்து நடப்பதாகவோ மட்டும் இருந்தால் பயனில்லை. கடவுளைப் பற்றிய நமது கருத்துக்கு முரண்பாடாக உள்ள அனைத்தையும் நம்மிடமிருந்து களைந்தெறிவதாக அது இருக்க வேண்டும். இந்த முறையினால் நாம் நமது இயற்கைப் பகுதியில் படிப்படியாக இறைவனைப் போலாவோம். இறுதியில் சாதர்ஸ்ய முக்தி - சாதர்ம்ய முக்தி என்றும் கூறுவர் - அடைவோம். அதாவது நமது கீழியற்கையினின்றும் விடுதலையடைந்து தெய்வீக இயற்கையைப் பெறுவோம்.

நமது ஜீவன் முழுவதையும் இறைவனுக்குக் கொடுக்கும்போது நிவேதனம் நிறைவு பெறுகிறது. ஜீவன் முழுவதையும் என்னும்போது நமது சிந்தனைகளும் செயல்களும் அதில் அடங்கும். இங்கு பக்தியோகம் ஞான, கர்ம யோகங்களின் சாரமான அம்சங்களைத் தனதாக்கிக் கொள்கிறது - தனது போக்கில், தனது பாவனையில் அவற்றை ஏற்றுக் கொள்கிறது. பக்தன் தனது வாழ்வையும் தனது செயல்களையும் இறைவனுக்கு வேள்வியாக்குகிறான், பக்தி யோகத்தில் அது அன்பு வேள்வியாக ஆகிறது. அதைத் தூண்டுவது அன்பு. கர்ம வழியில் தனது சங்கற்பத்தை இறைவனுடைய சங்கற்பத்துடன் இணைக்கும் முயற்சியாக அது நடைபெறுகிறது.

பக்தன் தன்னையும், தனது வாழ்வையும், தனக்குள்ளவை அனைத்தையும் தனது செயல்களனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிடுகிறான். இந்தச் சரணாகதி துறவு வடிவம் கொள்ளலாம். பக்தன் சாதாரண வாழ்வை விட்டுவிட்டு வாழ்வு முழுவதையும் இறைவனை வழிபடுவதிலும், அவனைத் துதிப்பதிலும், ஆனந்தமாக அவனைத் தியானிப்பதிலும் செலவிடலாம். இறைவன் ஒருவனையே தனக்குத் தேவையான ஒரே உடைமையாகக் கருதி தனது செல்வத்தையெல்லாம் தானம் பண்ணிவிட்டுப் பண்டாரமாகலாம். இறைவழிபாட்டிற்கான காரியங்கள், இறைவனுடன் தொடர்பு கொள்ள உதவும் செயல்கள் இவற்றைத் தவிர வாழ்க்கை சம்பந்தமான பிற எல்லா வேலைகளையும் அவன் விட்டுவிடலாம். அதிக பட்சமாக, துறவு வாழ்க்கை என்கிற பத்திரமான கோட்டையினுள்ளிருந்து கொண்டு, சிறப்பாக தெய்வீக இயல்பின் செயல்களாகத் தோன்றும்,
<< 1 | 2 | 3  >>  
மேலும்
இறைவனது சித்தம் என்ன என்பதை நாம் அறிந்து கொள்வது எப்படி?
இந்து மதம்: சுவாமி விவேகானந்தர்
இந்து மதம் - சுவாமி விவேகானந்தர்
இ‌ந்து மத‌ம் - சுவா‌மி ‌விவேகா‌ன‌ந்த‌ர்
‌இ‌ந்து மத‌ம் – சுவாமி விவேகானந்தர்
நமது ஜீவனின் ஏழு மையங்கள்