முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > அருளுரை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மார்கழித் திருப்பாவை பாடல் 25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கிலானகித் தான்தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே? உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருகி யாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள் :

பறை கேட்டு வந்த பெண்கள், தங்கள் வேண்டுகோளைக் கண்ணனிடம் வெளியிடும் பாடல்.

கண்ணா!

ஒப்பற்ற தேவகிக்கு மகனாகப் பிறந்த நீ, அன்று இரவிலேயே ஒப்பற்ற யசோதைக்கு மகனாகப் போனாய்.உன் பிறப்புதான், கம்சனுக்குத் தெரியக் கூடாதென்று மறைக்கப்பட்டதென்றால், உன் வளர்ப்பும் அப்படியே அமைந்தது. அதனால் நீ, ஒளித்து வளர்க்கப் பட்டாய். அதைப் பொறுக்காத கம்சன், (நீ, அவனுக்கு எந்த விதமான தீங்கும் செய்யாமல் இருந்தும்) தானே, "இக்குழந்தையைக் கொல்ல வேண்டும்" என்று நினைத்துச் செய்த தீங்குகளை எல்லாம், நிறைவேறாத படிச் செய்தாய் நீ. தீயவனான அந்தக் கம்சனின் வயிற்றில், நெருப்பாக இருந்த பெருமாளே!

உன்னிடம் யாசகம் கேட்டு வந்திருக்கிறோம் நாங்கள். எங்கள் வேண்டுகோளை நீ நிறைவேற்றினால், லக்ஷ்மி தேவிக்கு ஈடான உன் செல்வத்தையும், உன் வீரத்தையும் நாங்கள் பாடுவோம். உன் பிரிவினால் உண்டான வருத்தமும், குளிரில் வந்த வருத்தமும் நீங்கி, நாங்கள் மகிழ்ச்சியடைந்து வாழுவோம்.
மேலும்
மார்கழித் திருப்பாவை பாடல் 24
மார்கழித் திருப்பாவை பாடல் 23
மார்கழித் திருப்பாவை - பாடல் 22
மார்கழித் திருப்பாவை பாடல் 21
மார்கழித் திருப்பாவை - பாடல் 20
மார்கழித் திருப்பாவை பாடல் 19