முதன்மை பக்கம்  ஆன்மிகம் > ஆன்மிகம் > தலங்கள்
 
திருவேங்கடமுடையான் திருக்கோயில்
Webdunia
திருவேற்காடு திருவேங்கடமுடையான் திருக்கோயில்

ஸ்ரீ மதே ராமானுஜாய ந

இருப்பிடம்:

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் பூந்தமல்லி சாலையில் திருவேற்காடு நகரில் அமைந்துள்ளது.

திருக்கோயில் முகவரி:

நெ.7 லிங்கேஸ்வரா நகர்,
சிவன் கோவில் தெரு(பஞ்சாயத்து ஆபிஸஎதிரில்)
திருவேற்காடு
சென்னை-77.

தலவரலாறு:

எம்பெருமானின் திருவுள்ளப்படி மேற்கண்ட விலாசத்தில் எம்பெருமானின் அருள்வாக்கு மூலமாக இத்திருக்கோயில் அமையப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலானது சிற்ப சாஸ்திர வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டு ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

சென்னை மாநகருக்கு அருகாமையில் வேத மறைகள் போற்றிடும் திருவேற்காடு திருத்தலத்தில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு தென்பாகத்தில் தேவியின் திருத்தமையனான திருவேங்கடவன் திருப்பதி திருமலையில் உள்ளது போல மத்திய வராஹ nக்ஷத்ரமாக ஸ்ரீபூவராக ஸ்வாமி அருள்மிகு குபேரலக்ஷ்மி ஸ்மேத ஸ்ரீநித்ய கல்யாண வேங்கடேஸ்வரராக அர்ச்சாரூபியாக காட்சி தந்து பக்தர்களின் எண்ணங்கள் ஈடேறும் வகையில் அருள் பாவித்து வருகிறார்.

ஆலயத்தில் உள்ள மூர்த்திகள்:

மூலவர

1. ஸ்ரீ குபேரலக்ஷ்மி ஸமேத ஸ்ரீநித்ய கல்யாண வேங்கடேச பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம
2. வரம் அருளும் வராஹர்
3. அனந்தாழ்வார் (நாகராஜன்)
4. காரிய ஸித்தி கருடன
5. இஷ்டஸித்தி ஆஞ்சனேயர


உற்சவ மூர்த்தி:

1. ஸ்ரீ சுகந்த லஷ்மி கோதாநாயகி ஸமேத ஸ்ரீ சுகந்த ஸ்ரீநிவாசர
2. மக்கட்பேறு அருளும் ஸ்ரீ பாலஸந்தான கோபாலன

ஆழ்வார் ஆசார்யர்கள்:

ஸ்ரீ சேனை முதலியார் (விஷ்வக்சேனர்)
ஸ்ரீ பராங்குசர் நம்மாழ்வார்.
ஸ்ரீ கலியன் திருமங்கை ஆழ்வார்,
பெரும்புதூர் வள்ளல் ஸ்ரீ இராமானுஜர் (எம் பெருமானார்)

பக்தர்களின் தரிசன நேரம்:

காலை 7 முதல் 10 மணி வர
மாலை 5 முதல் 8.30 மணி வர

பக்தர்களின் விசேஷ வேண்டுதலின் பேரில் திருமஞ்சனம், திருக்கல்யாண உற்சவம், நித்ய பூஜை பக்ஷ பூஜை சயன பூஜை, வருஷ பூஜை நடத்தி வைக்கப்படும்.

பிரதி பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை ஸ்ரீ அனுமன் அருள் பெற சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. விசேஷ ஆராதனை (பூஜை) கோரிய பலன்களை பன்மடங்கு ஸித்திக்கப்படும்.

ஹோமங்கள்:

பக்தர்களின் விருப்பத்திற்கு இணங்க இவ்வாலயத்தில் ஆயுள் ஹோமம், ஸ்ரீ சந்தான கோபால ஹோமம் (வம்ச அபிவிருத்தி), ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி குபேர ஹோமம்(வியாபார வளர்ச்சி இஷ்ட ஐஸ்வர்கள் வளர) மற்றும் ஸீமந்தம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்றவை வைதிக ஆசார அனுஷ்டானங்களுடன் பக்தி சிரத்தையுடன் பகவான திருவருளால் இனிதே நடத்தி வைக்கப்படும்.
மேலும்
திருக்கவித்தலம்
திருக்கூடலூர்
திருக்கண்டியூர் (கண்டியூர்)
கோயிலடி (திருப்பேர் நகர்)
திரு அன்பில்
திருவெள்ளறை