திருவடிவழகிய நம்பியாகிய எம்பெருமான் திரு அன்பில் என்ற இத்திருத்தலத்தில் திருச்சி அருகே எழுந்தருளியுள்ளார்.
அமைந்துள்ள இடம்: - திருச்சி - கல்லணை வழியாக கும்பகோணம் பேருந்து வழியில் அமைந்துள்ளது. லால்குடிக்குக் கிழக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. நடராஜபுரம் என்ற ஊருக்குப் போய் அங்கிருந்து 3/4 கி.மீ. தொலைவில் உள்ள அன்பில் ஊரை அடையலாம். தங்குவதற்கு வசதியான விடுதிகள் இல்லை. திருச்சியிலிருந்து கொண்டு பெருமானைத் தரிசித்து விட்டு வரலாம்.
மூலவர்: - வடிவழகிய நம்பி. கிழக்கு நோக்கிய புஜங்க சயனம்.
தாயார்: - அழகியவல்லி நாச்சியார்.
உத்ஸவர்: - சுந்தரராஜப் பெருமாள்.
தீர்த்தம்: - மண்டூக புஷ்கரிணி, கொள்ளிடம்.
விமானம்: - தாரக விமானம்.
சிறப்பு: - பழைய காலக் கல்வெட்டுகள் பல இங்கே உள்ளன. ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும்.
மங்களாசாஸனம்: - திருமங்கையாழ்வார் தமது ஒரு பாசுரத்தால் (2417) மங்களா சாஸனம் செய்துள்ளார்.
"நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள், நாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத் தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால், அணைப்பார் கருத்தனா வான்" - நான்முகன் திருவந்தாதி
பாசுரம் 2417 நான்முகன் திருவந்தாதி
|