- மாற்றமுடியா கிரக விதிகளின் அடையாளங்கள்
காஞ்சிபுரம் செப் 4, 2001 : "மியூஸிக் டுடே", காஞ்சி காமகோடி மகாசாமி மண்டபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் "நவக்கிரகங்கள் - மாற்றமுடியா கிரக விதிகளின் அடையாளங்கள்" என்ற சமஸ்கிருத பக்தி இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டது. காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இவ் விழாவுக்குத் தலைமையேற்றனர்.
இந்த ஆல்பத்தில் முத்துசாமி திட்சிதர் அவர்களால் இயற்றப்பட்ட நவக்கிரஹ ஸ்லோகங்கள், மந்திரங்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது. இதற்கு இசை வடிவம் கொடுத்தவர் இசை மேதை எல்.வைத்தியநாதன் ஆவார். டாக்டர். வி.வி.ஸ்ரீவத்ஸா - நிறைய நூல்களுக்கு ஆசிரியரான இவர், நவக்கிரகங்கள் பற்றிய ஆய்விலிருந்து இந்த ஆல்பத்திற்கு அதிகளவு பங்களிப்பு செய்திருக்கிறார்.
இந்த ஆல்பம் 9 நவகிரக ஸ்தானங்கள் ஊடே நம்மை அழைத்துச் செல்கிறது. தினமும் அன்றைய நாளுக்கு தொடர்புள்ள நவக்கிரக சுலோகங்களை நாம் கேட்கும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். இதற்காக நிறைய நவகிரகங்கள் சம்பந்தப்பட்ட மற்றும் நவக்கிரக கோயில்கள் பற்றிய ஆராய்ச்சியும் நடத்தப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மியூசிக் டுடே - இந்தியா டுடே நிறுவனங்களைச் சேர்ந்த இந்த நிறுவனம் 1990 ல் நிறுவப்பட்ட நாள் முதலாக இந்தியாவின் திரட்சியான இசை பாரம்பரியத்தை பாதுகாத்தும், பரவலாக்கியும் வருகிறது. இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாகவே இந்த "நவக்கிரகங்கள்" இசை ஆல்பத்தையும் வெளிக் கொணர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
|