முதன்மை பக்கம்  ஆன்மிகம்  ஆன்மிகம்  பர்சனாலிட்டி
 
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
Webdunia
இந்திய நாட்டினருக்கும் இந்து மதத்தினருக்கும் என்றில்லாமல் மனித இனம் முழுமைக்கும் ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர். எந்த மதத்தவராயினும் அவர்கள் அனைவரும் முழுமையாய் ஏற்றுக் கொள்ளத்தக்க பெருமையுடன் விளங்குவது ஸ்ரீராமகிருஷ்ணாவின் உபதேசங்களாகும்.

காளி கோயில் பூசாரியா, தான் வணங்கும் தெய்வத்தின் மீது அளவற்ற பக்திக் கொண்டு உலக வாழ்வையே மறந்து பக்தியில் திளைத்து வந்த ஸ்ரீராமகிருஷ்ணர் பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவர் மனதிலும் ஆன்மீக விளக்கெரிய தூண்டுதலாக அமைந்தார்.

ஆண்கள், பெண்கள், இளைஞர், முதியோர் என்று அனைவரும் தெய்வத்தை அடைவதற்கான பாதையை காட்டினார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

ஸ்ரீராமகிருஷ்ணர் வேதாந்த உண்மைகளை கண்டறிந்தவர் மட்டுமல்ல பிறருக்கு அதனை உணர்த்த வல்லவர். அந்த உண்மைக்கு அழைத்து செல்லும் பாதைகள் அனைத்திலும் யாத்திரை செய்தவர். இறையணுப்போதி என்ற கங்கைப் பெருக்கில் நீராடியவர் மட்டுமல்ல. பிறரையும் நீராட வைப்பவர். அந்த நதியின் ரம்பம் முதல் கடலில் கலக்குமிடம் வரையிலுள்ள எல்லா துறைகளிலும் மூழ்கி நதியின் ழப் பகுதிகள் அனைத்தையும் கண்டறிந்தவர். பிறவி பெருங்கடலை தாண்டியவர் மட்டுமல்ல பிறரையும் தாண்ட வைக்கும் பெரும் தோணி அவர். ஜீவன் முக்தர் மட்டுமல்ல அவதார புருஷர். துறவி மட்டுமல்ல பரம அம்சர். மத ஆச்சாரியர் மட்டுமல்ல, எல்லா மதங்களும் ஒன்றுக் கூடுகின்ற சங்கம பூமி.

இந்தியாவில் ஆன்மீக பேரொளியை அமெரிக்காவிற்கும் பின் ஐரோப்பாவிற்கும் கொண்டு சென்று பரப்பிய சுவாமி விவேகானந்தரை தந்தவர் ஸ்ரீராமகிருஷ்ணர்.