டாரட் | இந்து | கிறித்துவம் | இஸ்லாம் | மற்றவை | பஞ்சாங்கம் | பண்டிகைகள் | கட்டுரைகள் | செய்திகள் | தலங்கள் | அருளுரை | பொ‌ன்மொ‌ழிக‌ள் | ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி
முதன்மை பக்கம் » ஆன்மிகம் » ஆன்மிகம் » செய்திகள் » சனிப் பெயர்ச்சி பலன்கள் – புத்தகம் வெளியீடு (Sani Peyarchi effects - Book released)
 
WD
செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப் பெயர்ச்சி ஒவ்வொரு இராசிதாரருக்கும் எந்தந்த பலன்களை அளிக்கும் என்பதை விளக்கி ஜோதிட ரத்னா முனைவர் வித்யாதரன் எழுதிய புத்தகம் இன்று வெளியிடப்பட்டது.

ஜி.ஆர்.டி. கன்வென்சன் செண்டரில் நடந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இராமசுப்ரமணியன் அவர்கள் புத்தகத்தை வெளியிட இராஜ் தொலைக்காட்சி இயக்குனர் இராஜேந்திரன் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார்.

வரும் ஞாயிற்றுக் கிழமை சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 3.27 மணிக்கு சனிப் பெயர்ச்சி நிகழ்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிம்ம ராசியில் இருந்துவந்த சனி பகவான், அன்று கன்னி ராசிக்கு வருகிறார்.

அன்றைய நாளில் சனி பகவான் இயந்திர வடிவில் எழுந்தருளியுள்ள ஏரிக்குப்பம் சனீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூசை நடைபெறுகிறது. இந்தப் புத்தகம் ரூ.20க்கு விற்கப்படும். அதன் வாயிலாக கிடைக்கும் வருவாய் இக்கோயிலின் திருப்பணிக்குச் செலவிடப்படும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்