உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத் கோயில் நடை அடைக்கப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் அமைந்துள்ளது. பத்ரிநாத் கோயிலிலிருந்து 70 கி.மீ. தூரத்தில் உள்ள ஜோஷிமடத்துக்கு அருகே ஹெலாங் என்ற இடத்தில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பத்ரிநாத் கோயிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள், ஆங்காங்கே தங்கியுள்ளனர். இதையடுத்து, பத்ரிநாத் கோயில் நடை சாத்தப்பட்டுள்ளது. நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்பு சீர் செய்யப்பட்டபின் கோயில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
|