முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > செய்திகள் > சென்னையில் ராகவேந்திரர் ஆலயம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சென்னையில் ராகவேந்திரர் ஆலயம்
இதுவரை எ‌ங்குமே இ‌ல்லாத அள‌வி‌ற்கு ‌மிக‌ப்பெ‌ரிய ஸ்ரீராகவே‌ந்‌திர‌ர் ஆல‌ய‌த்தை சென்னையில் ஒரு கோடி ரூபாய் செலவில் க‌ட்ட ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இது குறித்து `ராகவேந்திரா கிரந்தாலயா அறநிலை' நிர்வாகிகள் வி.மோகன்ராவ், பாலாஜி, `அம்மன்' சத்தியநாதன், ரகோத்தமன், வாசுமுராரி ஆகியோர் கூறியதாவது, ஸ்ரீராகவேந்திரர் 1671-ம் ஆண்டு பிருந்தாவன பிரவேசம் மேற்கொண்டார். அந்த இடத்தில் அவருக்கு மிகப்பெரிய கோவில் அமைக்கப்பட்டு உள்ளது.

இது தவிர அவருடைய அருளாசியோடு, சென்னை திருவல்லிக்கேணி, அயனாவரம் உள்பட நாடு முழுவதும் 700 மிருத்திகா பிருந்தாவனங்கள் அமைந்துள்ளன.

இந்த நிலையில், ஸ்ரீராகவேந்திரருக்கு சென்னை அருகே இதுவரை எங்குமே இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கோவில் கட்ட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு, ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் செலவில், சென்னையில் ஸ்ரீராகவேந்திரர் ஆலயம் அமைக்கப்பட உள்ளது.

பக்தர்களின் நன்கொடை மூலம் இந்தப்பணிகள் மேற்கொள்ளப்படும் இந்த கோவில் மந்த்ராலயாவில் உள்ள பிரதான கோவில் நிர்வாகத்தின் அனுமதியோடு கட்டப்படும்.

ராகவேந்திரர் கோவில் அமைப்பதற்காக "ஸ்ரீராகவேந்திர க்ரந்தாலயா அறக்கட்டளை'' பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த அறக்கட்டளை மற்றும் ராகவேந்திரர் ஆலயம் அமைப்புப்பணிகள் தொடக்க விழா சென்னையில் டிச‌ம்ப‌ர் 31-ந் தேதி நடக்கிறது.

சென்னை அயனாவரம் பனந்தோப்பு காலனியில் உள்ள ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில் நடைபெறும் விழாவில், மந்த்ராலயம், ஸ்ரீராகவேந்திர மடத்தின் 20-வது மடாதிபதியின் பேரன் ஸ்ரீராஜா எல்.சூரீந்திராச்சார் (ஸ்ரீராகவேந்திரரின் வம்சாவழி பேரன்) பணிகளைத் தொடங்கி வைக்கிறார் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தன‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
வரும் வார விசேஷங்கள்
அச்சன்கோயில் ‌திருவாபரண‌ப் பெ‌ட்டி
ஐயப்பன் கோயில் ஆண்டு விழா துவக்கம்
திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்
திருவண்ணாமலையில் இத்தாலியர்களின் கச்சேரி
பூத வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர்