முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
திருப்பதி‌யி‌ல் பிரம்மோற்சவ விழா  Search similar articles
திருப்பதி ஏழுமலையான் கோ‌யிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரு‌ம் அக்டோபர் மாதம் 1-ந் தேதி துவ‌ங்‌கி நடைபெற உ‌ள்ளது.

webdunia photoWD
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா, வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா, வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி தொடங்க இருக்கிறது. அ‌ன்‌றி‌ல் இரு‌ந்து தொட‌ர்‌ந்து 9 நாட்கள் விழா நடைபெறும்.

இது கு‌றி‌த்த ஆலோசனை கூட்டம் நே‌ற்று நடைபெ‌ற்றது. கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய கே.வி.ரமணாச்சாரி, அக்டோபர் 1-ந் தேதி காலை துஜாரோகனத்துடன் ‌பிர‌ம்மோ‌ற்சவ விழா துவ‌ங்கு‌கிறது.

அ‌ன்றைய ‌தின‌ம் இரவு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவ‌ர் மலையப்ப சாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

2-ந் தேதி காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலும் சாமி திருவீதி உலா நடைபெறும்.

3-ந் தேதி காலை சிம்ம வாகனத்தில் திருவீதி உலா. இரவில் முத்துப்பந்தல் அலங்காரம்.

4-ந் தேதி காலை கல்ப விருட்ச வாகனத்தில் சாமி திருவீதி உலா. அன்று இரவு சர்வபூபால வாகனம்.

webdunia photoWD
5-ந் தேதி காலை மோகினி அவதாரமும், இரவில் கருட சேவையும் நடைபெறும்.

6-ந் தேதி காலை அனுமந்த வாகனம். அன்று மாலை தங்கரதத்தில் சாமி திருவீதி உலா. இரவில் கஜ வாகனம்.

7-ந் தேதி காலையில் சூரிய பிரபா வாகனமும், இரவில் சந்திர பிரபா வாகனமும் நடக்க இருக்கிறது.

8-ந் தேதி ரதோற்சவம். அன்று காலை பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். இரவு அசுவ வாகனத்தில் சாமி திருவீதி உலா.

9-ந் தேதி காலை சக்கர ஸ்நானம். அன்று இரவு கொடியிற‌க்க‌ப்ப‌ட்டு, பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது எ‌ன்று அவர் கூறினார்.
மேலும்
அமர்நாத் யாத்திரை மீண்டும் துவங்கியது!
கடலூ‌ர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோ‌யி‌ல் கும்பாபிஷேகம்
‌சி‌‌றிர‌ங்க‌ம் கோ‌யி‌லி‌ல் ப‌யி‌‌ற்‌சி அ‌ர்‌ச்சக‌ர்க‌ள் ஹோம‌ம் நட‌த்‌தின‌ர்!
மதுரை மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை நடக்கிறது!
தங்கத் தேரில் பத்மாவதி தாயார் பவனி!
ம‌யிலா‌ப்பூ‌ர் கபாலீஸ்வரர் கோ‌யிலில் நாளை அறுபத்து மூவர் திருவிழா!