முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தங்கத் தேரில் பத்மாவதி தாயார் பவனி!
badmavathi
webdunia photoWD
திருப்பதி அருகே உள்ள திருச்சானூரில் கோயில் கொண்டுள்ள பத்மாவதி தாயார் முதன் முறையாக தங்கத் தேரில் பவனி வந்தார்.

பத்மாவதி தாயாரின் உற்சவ சிலை கோயிலில் இருந்து ஆஸ்தான மண்டபம் வரை தங்கத் தேரில் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.

அலமேலு மங்காபுரம் என்று அழைக்கப்படும் திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் திருக்கோயிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தங்கத் தேர் வழங்கப்பட்டது.

இந்த தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் முதன் முறையாக பவனி வரும் நிகழ்ச்சி நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரை வணங்கினர்.

22 கி.கி. தங்கமும், 1,022 கி.கி. செப்பும் சேர்த்து செய்யப்பட்ட 20 அடி உயரமுள்ள இந்த தங்க ரதத்தின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் ஆகும்.
மேலும்
ம‌யிலா‌ப்பூ‌ர் கபாலீஸ்வரர் கோ‌யிலில் நாளை அறுபத்து மூவர் திருவிழா!
ப‌‌ண்ணா‌‌ரி‌ அ‌ம்ம‌ன் ‌வீ‌திஉலா!
மார்ச் 25ஆம் தேதி பண்ணாரியில் குண்டம்!
தேவாரம் பாடுவதை எதிர்ப்போர் மீது கடும் நடவடிக்கை- தமிழக அரசு
1000 ஆண்டுகளுக்குப் பிறகு கூழமந்தலில் சிவராத்திரி விழா!
ஜெர்மனி‌யில் இரண்டு புதிய ஹ‌ிந்து கோ‌யில்கள்!