புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா இந்த மாதம் 25ஆம் தேதி நடக்கிறது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஸ்தலங்களில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரியும் ஒன்றாகும். இந்த கோயிலில் ஒவ்வொறு ஆண்டும் தமிழ் மாதம் பங்குனியில் வரும் உத்திரநட்சத்திரம் அடுத்து வரும் செவ்வாய்கிழமை குண்டம் விழா நடப்பது வழக்கம்.
இந்த விழாவிற்கு ஈரோடு மாவட்ட அரசு நிர்வாம் பொது விடுமுறை அறிவிக்கப்படும். இந்த விழாவில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பெங்களூரு, மைசூரு, கொள்ளேகால், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு குண்டம் மிதிப்பது வழக்கம்.
இந்த வருடம் இம்மாதம் 25ஆம் தேதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணிக்கு குண்டம் விழா நடக்கவுள்ளது. மார்ச் 10ஆம் தேதி அதாவது மாசி 27ஆம் தேதி திங்கட்கிழமை இரவு பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. மார்ச் 18ஆம் தேதி பங்குனி 5ஆம் தேதி செவ்வாய் இரவு கம்பம் சாட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
25ஆம் தேதி குண்டம் விழாவும், 26ஆம் தேதி புஷ்பரதம், 27ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 28ஆம் தேதி திருவிளக்கு பூஜை மற்றும் மார்ச் 31ஆம் தேதி பங்குனி 18ஆம் தேதி திங்கட்கிழமை மறுபூஜை விழாவும் நடக்கவுள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையர் பாரதி, பரம்பரை அறங்காவல் குழு தலைவர் புருசோத்தம்மன் ஆகியோரது தலைமையில் அதிகாரிகள், அறங்காவல்குழுவினர் செய்து வருகின்றனர்.
|