மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி பெருவிழா இன்றும் (21 ஆம் தேதி), நாளையும் (22ஆம் தேதி) நடைபெற உள்ளது.
இதனையொட்டி இன்று அதிகாலை 3.30 மணிக்கு மங்கல இசையும், சாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு பங்காரு அடிகளாருக்கு வரவேற்பும், பாதபூஜையும் பக்தர்களால் செய்யப்படுகிறது. காலை 10 மணிக்கு அன்னதானத்தை ப.அன்பழகன் தொடங்கி வைக்கிறார். மாலை 5 மணிக்கு லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில் கலச, விளக்கு வேள்விப்பூஜையும் நடைபெறும். இரவு 8.30 மணிக்கு அங்கிங்கு இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாளை (22ஆம் தேதி) அதிகாலை 3.30 மணிக்கு மங்கல இசையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு பங்காரு அடிகளாருக்கு பக்தர்கள் வரவேற்பும், பாதபூஜையும் செய்கிறார்கள். காலை 10 மணிக்கு கோ.ப.செந்தில்குமார் அன்னதானத்தை தொடங்கி வைக்கிறார். மாலை 6 மணிக்கு சிவமணி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து பங்காரு அடிகளார் தைப்பூச ஜோதியை ஏற்றுகிறார். இரவு 7 மணிக்கு ஜோதி பிரசாதம் வழங்கப்படுகிறது. தைப்பூச ஜோதி விழா கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ளது. இதில் பல வெளிநாட்டு செவ்வாடை பக்தர்கள் பங்கேற்கும் ஊர்வலமும் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் செய்து உள்ளது.
|