முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > இஸ்லாம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கு‌ர்ஆனை‌க் க‌ற்க வே‌ண்டு‌மெ‌ன்ற க‌ட்டளைக‌ள்
இதஇ‌ந்க‌ட்டுரை‌யி‌னஇர‌ண்டா‌மபாக‌ம்.

allah
webdunia photoWD
தஜ்வீது என்பது அட்சரங்களுக்குரிய உரிமைகளை அளிப்பதும், ஒழுங்கு முறைகளை நிறைவேற்றுவதும், அட்சரங்களுக்குரிய உச்சரிப்புகளை ஒழுங்காக உச்சரிப்பதும், ஓதுகைக்கு இன்பத்தை சேர்ப்பதுமாகும். ஓதுவது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தேவையில்லாமல் நீட்டுவதோ, உயர்த்துவதோ, தாழ்த்துவதோ, அளவுக்கு மீறி குறுக்குவதோ கூடாது.

அருளப்பட்டபடி சரளமாக ஓத வேண்டும் என்று விரும்புவோர் இப்னு உம்மி அப்த்(ரலி) அவர்களின் ஓதுகையைப் போல் ஓத வேண்டும் என்று திருநபி அவர்கள் கூறியுள்ளார்கள். இப்னு உம்மி அப்த் என்பது அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மற்றொரு பெயராகும். திருக்குர் ஆனை தஜ்வீத் சட்டப்படி ஓதுவதில அவர் பெரும் பாக்கியம் அளிக்கப்பட்டிருந்தார். இவ்விபரங்கள் ·ப்ஸீர் அல் இத்காவில் எழுதப்பட்டிருக்கின்றன.

திருக்குர்ஆனின் கருத்துக்களைப் புரிந்து அதன்படி நடந்து கொள்வதற்கு இந்த உம்மத்து (இக்கால மனித வர்க்கம்) கடமைப்பட்டுள்ளது போன்று, குர்ஆனின் வார்த்தைகளைச் சரியாக ஓதவும், திருநபி அவர்களிடமிருந்து எவ்வாறு அறிவிக்கப்பட்டதோ அவ்வாறே உச்சரிப்புப் பேதமின்றி ஓதவும் கடமைப்பட்டிருக்கிறது. இவ்விஷயத்தில் நன்கு ஓதி நன்மைப் பயனை அடைபவரும் இருக்கின்றனர். தவறாக ஓதி தீமைப் பயனை அடைபவரும் இருக்கின்றனர். ஆதலால் முடிந்தவரை முயற்சி செய்து திருத்திக் கொள்ள வேண்டும். சிலருக்குத் திருத்தமாக ஓத இயற்கையாக நா வளைந்து கொடுக்காது. இவ்வாறானவர் பாவத்திற்கு ஆளாக மாட்டார். என்றாலும்,
1 | 2  >>  
மேலும்
குர்ஆனைக் கற்க வேண்டுமென்ற கட்டளைகள்
பொ‌ய்மையை களைவோ‌ம்: முத‌ல்வ‌ர் ‌மீலாது ந‌பி வா‌ழ்‌த்து!
இ‌ஸ்லா‌‌ம் மாத‌த்‌தி‌ன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ம்!
ப‌க்‌ரி‌த் : இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள்‌!  
ஹஜ் பயணம் செ‌‌ல்பவ‌ர்களு‌க்கு பு‌த்த‌றிவு பயிற்சி!
இறையருளிய ர‌ம்ஜா‌ன் பண்டிகை!