குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள். பின்னர் அதனை ஓதுங்கள். குர்ஆனைக் கற்று கற்றபடி நடந்தவருக்கு உதாரணம் கஸ்தூரி நிறைந்த குடுக்கை எல்லா இடத்திலும் தனது நறுமணம் கமழச் செய்வது போன்றதாகும், குர்ஆனைக் கற்று தன் உள்ளிலேயே அதனை உறைய வைத்தவர் கஸ்தூரி நிறைந்த முத்திரை இடப்பட்ட குடுக்கையைப் போலிருக்கிறார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைராவும் உபய்யு இப்னு க·பும் (ரலி) நூல்கள் : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா
வாரிசுரிமைச் சட்டங்களையும் திருக்குர்ஆனையும் கற்று, பிறருக்குக் கற்றுக் கொடுங்கள். ஏனெனில் நான் மரணமடைபவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி) நூல் : திர்மிதீ
உமக்கு நான் குர்ஆனைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று எனக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறான் என்று உபய்யுவினிடம் திருநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னுடைய பெயரைத் தங்களிடம் அல்லாஹ் குறிப்பிட்டானா என்று உபய்யு வினவினார். அல்லாஹ் உம் பெயரைக் குறிப்பிட்டான் என்று திருநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது உபய்யு (மகிழ்ச்சியால்) அழத் தொடங்கிவிட்டார்.
அறிவிப்பவர் : அனஸுப்னு மாலிக் (ரலி) நூல் : புகாரீ
இந்த ஹமீஸில் கண்டவாறு உபய்யுப்னு கஃப்(ரலி) ஆனந்தக் கண்ணீர் விட்டு முழுமுயற்சியுடன் திருக்குர்ஆனை முறைப்படி கற்றுக் கொண்டார். ஜிப்ரயீல் அலைஹி அவர்களிடமிருந்து திருநபி(ஸல்) கற்றுக் கொண்டதைப் போன்று திருநபி(ஸல்) அவர்களிடம் உபய்யுப்னுகஃபு(ரலி) கற்றுக் கொண்டதுடன், ஏனைய ஹுஹாபிகளுக்குத் திருக்குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்கும் பணியிலும் திருநபி(ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்டார். இவரிடமிருந்து மற்றவர்கள் கிராஅத்தைக் கற்றுக் கொண்டனர்.
|