எங்கும், எதிலும் நிறைந்து இருப்பவர் விநாயகர். நாம் விநாயகரை வணங்க எங்கோ இருக்கும் கோயிலுக்குக் கூட செல்ல வேண்டாம், பல வீடுகளில் வாயில்களிலும், எல்லா கோயில்களிலும் முக்கியமாக வீற்றிருப்பவர் விநாயகர்தான்.
அவரை பூஜிக்க நேரம், காலம் எதுவும் இல்லை. ஆனாலும் அவருக்கு மிகவும் உகந்த நாள் எது தெரியுமா? ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி எனப்படும் நான்காம் நாளாகும்.
இதைத்தான் நாம் விநாயகர் சதுர்த்தி என்று வழிபடுகிறோம்.
சரி அவரது பல்வேறு உருவங்களைப் பற்றி காணலாம்.
விநாயகர் ஓங்கார வடிவானவர், முப்பத்தி இரண்டு விதமான வடிவங்களுடன் தோற்றமளிக்கும் விநாயகரின் ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு தத்துவங்கள் உள்ளன.
1. பால கணபதி
2. தருண கணபதி
3. பக்தி கணபதி
4. வீர கணபதி
5. சக்தி கணபதி
6. துவிஜ கணபதி
7. சித்தி கணபதி
8. உச்சிஷ்ட கணபதி
9. விக்ன கணபதி
10. க்ஷிப்ர கணபதி
11. ஏரம்ப கணபதி
12. லட்சுமி கணபதி
13. மகா கணபதி
14. விஜய கணபதி
15. நிறுத்த கணபதி
16. ஊர்த்துவ கணபதி
17. ஏகாட்சர கணபதி
18. வர கணபதி
19. திரயாட்சர கணபதி
20. க்ஷிப்ரப்ரசாத கணபதி
21. ஹரித்திரா கணபதி
22. ஏகதந்த கணபதி
23. சிருஷ்டி கணபதி
24. உத்தண்ட கணபதி
25. ரணமோசன கணபதி
26. துண்டி கணபதி
27. துவிமுக கணபதி
28. மும்முக கணபதி
29. சிங்கமுக கணபதி
30. யோக கணபதி
31. துர்க்கா கணபதி
32. சங்கடஹர கணபதி
|