திருப்பதி ஸ்ரீநிவாச உற்சவரின் திருக்கல்யாணம் சென்னைத் தீவுத்திடலில் நாளை மாலை (ஞாயிற்றுக்கிழமை) 6 மணியளவில் நடைபெற உள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ள இந்த திருக்கல்யாண உற்சவத்திற்காக திருப்பதியில் இருந்து ஸ்ரீநிவாசர் உற்சவர் சிலை சென்னை கொண்டு வரப்படும்.
திருமண வைபவ நிகழ்ச்சி முடிந்ததும் உடனடியாக உற்சவர் சிலை திருப்பதிக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடந்த முறை தியாகராயா நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோயிலில் இந்த திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டுள்ளது. இதனை சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் தரிசித்துள்ளனர்.
பொதுமக்கள் அதிகம் பேர் பார்க்கும் வகையிலும், ஏழை மக்கள் திருப்பதிக்கு வந்து இறைவனின் திருக்கல்யாண வைபவத்தைக் காண முடியாததாலும் அவர்களுக்காக சென்னைத் தீவுத்திடலில் ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம் நடத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்தது.
ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணியளவில் நடைபெறும் இந்த திருக்கல்யாண வைபவத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|