முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > இந்து
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பிரதோஷ வகைகளு‌ம் வல‌ம் வ‌ரு‌ம் முறையு‌ம்
pradosham
webdunia photoWD
தோஷங்கள் எல்லாம் நீங்கி இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் வீடுபேற்றை அளிக்கும் சக்தி பிரதோஷ விரதத்திற்கும் வழிபாட்டிற்கும் உண்டு.

பிரதோஷத்தை நம் முன்னோர்கள் ஐந்து வகையாகப் பிரித்துக் கூறுகிறார்கள்.

அவையாவன... நித்ய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் ஆகியனவாகும்.

இவைகளை விளக்கமாகப் பார்க்கலாம்...

நித்ய பிரதோஷம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணி வரையிலான காலமே நித்ய பிரதோஷம் எனப்படும். இந்தக் காலத்தில் நாம் எங்கிருந்தாலும் சிவ மந்திரமான பஞ்சாட்சரத்தை உச்சரிக்கலாம்.

பஞ்சாட்சரம் என்பது ஓம் சிவாய நம என்பதே.

பட்சப் பிரதோஷம் என்பது ஒவ்வொரு தமிழ் மாதமும் வளர்பிறை (சுக்லபட்சம்) திரயோதசியில் வருவதே பட்சப் பிரதோஷம் எனப்படும்.

மாதப் பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதமும் தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) திரயோதசியில் வருவது மாதப் பிரதோஷம் ஆகும்.

பிரதோஷங்களில் எல்லாம் சிறந்த சனிப்பிரதோஷத்தையே மகா பிரதோஷம் என்கிறோம். சனிக்கிழமையில் வரும் பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபட்டால் பன்னிரெண்டு ஆண்டுகள் சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும். இதிலும், ஆவணி, கார்த்திகை மாதத்தில் வரும் சனிப் பிரதோஷமாக இருந்தால் அது மிகச் சிறப்பானதாகும்.

பிரளய காலத்தில் சிவனிலிருந்து உருவான இந்தப் பிரபஞ்சம் முழுவதும் சிவனுள்ளேயே ஒடுங்கும். இதுவே பிரளப் பிரதோஷம் எனப்படும்.

பிரதோஷ‌த்த‌ன்று கோ‌யிலை வல‌ம் வரு‌ம் முறை...... >
1 | 2  >>  
மேலும்
மகா‌ன் ஸ்ரீ சு‌ப்பையா சுவா‌மிக‌‌ளி‌ன் அவதார‌ம்!
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
ஸ்ரீ அரவிந்தர்
பூரி ஜெகநாதர் ஆலய ரதயாத்திரை
பிரதோஷ வழிபாடு
ஆடி -18, பதினெட்டாம் பெருக்கு