சர்வதாரி ஆண்டு, வைகாசி 4, (மே மாதம் 16ஆம் நாள், ஜமாதுல் அவ்வல் 11), சனிக்கிழமை.
இன்று சனி பிரதோஷம். சிவன் கோயில்களில் இன்று 4 மணி முதல் 6 மணி வரை சிறப்பான பிரதோஷ பூஜைகள் நடைபெறும்.
மாயவரம் ஸ்ரீமாயூரநாத சுவாமி குதிரை வாகனத்தில் புறப்பாடு. மதுரை ஸ்ரீகூடலழகர் யானை வாகனத்தில் புறப்பாடு. திருமோகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் வைரச்சப்பரத்தில் பவனி வரும் காட்சி. திருவாதவூர் திருக்கல்யாணம்.
|