முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > பண்டிகைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கள்ளழகர் மதுரை புற‌ப்பாடு
சித்திரைத் திருவிழா‌வி‌ற்காக க‌ள்ளழக‌‌ர் கோவிலில் இருந்து, அருள்மிகு கள்ளழகர் தங்கப் பல்லக்கில் இ‌ன்று மதுரை நோ‌க்‌கி‌ப் புற‌ப்படு‌கிறா‌ர்.

அழகர்கோவிலில் சுந்தரராஜப் பெருமாள் சன்னதியில் பிற்பகல் சிறப்பு பூஜைகளுக்குப் பின்னரஇ‌ன்று மாலை 5.30 மணியளவில், பெருமாள் தோளுக்கினியனாக மூலஸ்தானத்திலிருந்து வெளிவருகிறார்.

அத‌ற்கு மு‌ன்னதாக, இ‌ன்று பிற்பகல் ஒரு மணியளவில் தங்கப் பல்லக்குக்கு எழுந்தருளுகிறார். அங்கு கள்ளழகர் திருக்கோல அலங்காரம் முடிந்து, மாலை 5 மணியளவில் கோயிலிலிருந்து புறப்பட்டு, பதினெட்டாம்படி கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

அங்கு பல்லக்குக்கு மூங்கில் தடிகளைக் கொண்டு கட்டும் "கொம்பு சாற்றுதல்' நிகழ்ச்சி நடைபெறும்.

பின்னர், மாலை 6 மணிக்கு மேல் அழகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர்கோவிலில் இருந்து மதுரை புதூர், கோரிப்பாளையம் வண்டியூர் வரையிலும் வழிநெடுகிலும் 398 திருக்கண் மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.

19-ம் தேதி அதிகாலை 3 மணியளவில், மூன்றுமாவடியில் பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்கும் "எதிர்சேவை' நடைபெறுகிறது.
மேலும்
பங்குனி உத்திரத்தின் மகிமை
மரண‌த்தை வென்ற இயேசு கிறிஸ்து!
மகா சிவராத்திரி‌யி‌ன் ம‌கிமை!
முகர‌ம் மே‌ன்மைக‌ள்!
ப‌க்‌ரி‌த் : இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள்‌!
‌திருவ‌ண்ணாமலை‌யி‌ல் கா‌ர்‌த்‌திகை ‌தீப‌ம்