ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக கோயிலில் காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
ஏழு அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக சுமார் 3,000 கிலோ நெய்யும், 1,000 மீட்டர் காடா துணியால் ஆன திரியும் பயன்படுத்தப்படுகிறது.
கார்த்திகை தீபம் ஏற்றும் போது திருவண்ணாமலை உச்சியை நோக்கி அரோகரா, அரோகரா எனக் கூறி தீபத்தை வணங்குவது இறைவனை நேரில் தரிசனம் செய்வதற்கு ஒப்பானதாக கருதப்படுகிறது.
அதே சமயம் திருவண்ணாமலையில் உள்ளவர்கள் தங்கள் வீடுகள், கடைகள், நிறுவனங்களிலும் தீபம் ஏற்றி வணங்கி மகிழ்வார்கள். பலர் தாங்கள் நிற்கும் இடத்திலேய தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்குவார்கள்.
அன்றைய தினம் திருவண்ணாமலைக்கு செல்ல முடியாத பக்தர்களின் வசதிக்காக அன்று முதல் 11 நாட்களுக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
திரு அண்ணாமலையார்!
பாவங்கள் விலக அண்ணாமலை சுற்றி இறைவனை வணங்குவோம்!
கிரிவலத்தில் கடை பிடிக்க வேண்டியவை...
பதினேழு நாள் பிரம்மோற்சவம்
பிரகாசமான கார்த்திகை பௌர்ணமி
|