முதன்மை பக்கம்  ஆன்மிகம் > ஆன்மிகம் > பண்டிகைகள்
 
கார்த்திகை மாத‌த்‌தி‌ன் மகிமை
கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின்போது நீராடுபவர்கள் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.

விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.

கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள், இறைவனுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.

கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் தோஷங்களிலிருந்து விடுபடுவார்கள். கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வழிபடுபவர்கள் புண்ணிய பலனை அடைவர்.

கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் இரு‌ப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பதத்தை அடைவார்கள்.
மேலும்
பிரகாசமான கார்த்திகை பௌர்ணமி
தீபாவளி கொண்டாட நல்ல நேரம்!
தீபாவளி : லட்சுமி பூஜை செய்ய, பட்டாசு வெடிக்க...
கண்ணைக் கவரும் தீபாவளி புது வரவுகள்!
விலை கூடினாலு‌ம் ப‌ட்டாசு ‌வி‌ற்பனை படுஜோ‌ர்!
எதனா‌ல் தீபாவ‌ளி கொ‌ண்டாட‌ப்படு‌கிறது!