''தீபாவளி பண்டிகையை வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்குள் எண்ணெய் ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி பகவானை வழிபடுவது உகந்தது'' என்று தென்னிந்திய புரோகிதர்கள் சங்கத்தின் நிறுவனப் பொதுச் செயலர் ஆ.செ. நரசிம்ம அய்யர் தெரிவித்தார்.
சர்வஜித்து வருஷம் ஐப்பசி மாதம் 22ஆம் தேதி (8ஆம் தேதி) வியாழக்கிழமை கிருஷ்ணபட்சம், சதுர்த்தசி திதி, சித்திரை நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபதினத்தில் இவ்வாண்டு தீபாவளி பண்டிகை வருகிறது.
வெள்ளிக்கிழமை (9ஆம் தேதி) கிருஷ்ணபட்சம், அமாவாசை திதி, சுவாதி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபதினத்தில் மதியம் 12 மணிக்கு மேல் பிற்பகல் 3 மணிக்குள் சிவாலயம் அல்லது அம்மன் ஆலயம் சென்று கேதார கெளரி நோன்பு நோற்பதற்கு நல்ல நேரம் என்று நரசிம்ம அய்யர் கூறியுள்ளார்.
|