விவிலியத்தின் படி, இயேசு சிலுவையில் அறையுண்ட மூன்றாவது நாள் மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தார்.
மத்தேயு நற்செய்தியின் படி, இறை தூதர் ஒருவர் இயேசுவின் கல்லறை அருகே தோன்றி இயேசுவின் உயிர்ப்பை அவரது உடலுக்கு வாசனை பொருட்கள் பூச வந்த பெண்களுக்கு அறிவித்தார்.
தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி, நீங்கள் பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். 28 : 5
அவர் இங்கே இல்லை, தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார், கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். 28 : 6 சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள், அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அங்கே அவரைக் காண்பீர்கள், இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான். 28 : 7
லூக்காவின் படி இரண்டு இறைதூதராகும் மாற்குவின் படி அது வெண்ணிர ஆடை அணிந்த வாலிபனாகும். மாற்கு இயேசு முதலாவதாக மர்தலேன் மரியாளுக்கு தோன்றினார் .
யோவான் நற்செய்தியில் மரியாள் கல்லைறயுள் பார்க்கும் போது இரண்டு இறைத்தூதர் உயிருடன் உள்ளவரை இங்கு ஏன் தேடுகிறீர்கள் என கேட்டார். அவர் திரும்பியபோது இயேசுவைக் கண்டார், எனினும் இயேசு பெயர் சொல்லி அழைக்கும் வரை அடையாளம் காண முடியாதிருந்தார்.
அவர்கள் அவளை நோக்கி ஸ்திரியே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள், என் ஆண்டவரை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள், 20 : 13
இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டான், ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.20 : 14
இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக் கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள். 20 : 15
|