இந்த அளவிற்கு மருத்துவ குணமும், வீடு கட்டியிருக்கும் மனை, வீடு அமைந்திருக்கும் மனை மற்றும் கட்டட அமைப்புகளில் உள்ள குறைகளை நீக்கும் சக்தி எலுமிச்சைக்கு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
கனிகளின் அரசன் என்று எலுமிச்சையை சொல்லலாம். அதனால்தான் பிரபலமானவர்களைப் பார்க்கும் போது மரியாதை நிமித்தமாக இந்தக் கனியைத் தருவது வழமை.
நோயுற்றவர்களைக் காணச் செல்லும் போதும், நோயுற்றவரிடம் காணச் செல்பவர்கள் எலுமிச்சையை அளித்து நலம் விசாரிப்பது பழக்கத்தில் உள்ளது. இதில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன.
நோய்வாய்பட்டவரிடம் இருந்து எதுவும் பார்க்க வருபவரிடம் தொற்றாது. அதே நேரத்தில் நோயுற்றவர் குணமாகவும் எலுமிச்சை உதவும். எனவேதான், அந்தப் பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
எலுமிச்சை ஜீவ கனி மட்டுமல்ல. வெற்றிக் கனியுமாகும். அந்தக் காலத்தில் அரசர்கள் எதிரி நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் முன்பாக காவல் தெய்வம், எல்லைத் தெய்வம் சம்கார தெய்வங்களை எலுமிச்சை மாலை அணிவித்து, அந்த தெய்வங்கள் முன்பாக நின்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு அதன்பிறகு தங்களது படைகளை வழி நடத்திச் செல்வார்கள். போரில் வாகை சூடி திரும்பி வந்த பின்பு மீண்டும் எலுமிச்சை மாலை சூடி வழிபாடு செய்யும் வழக்கம் இருந்தது.
பில்லி, சூனியம், மாந்திரீகம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றைக்கும் காளி அம்மனுக்கு எலுமிச்சை மாலை சூடி வணங்கி வழிபடுவதை திருவக்கரை வக்கிர காளியம்மன், பட்டீஸ்வரம் துர்கையம்மன் உள்ளிட்ட பல முக்கிய ஆலய வழிபாடுகளில் பிராதானமாக அமைந்துள்ளதைக் காணலாம்.
|