முதன்மை பக்கம்  ஆன்மிகம் > ஆன்மிகம் > கட்டுரைகள்
 
வரம் ஆன்மீக வெளியீடு : பிரதோஷம்... சகல தகவல்களுடன்
Webdunia
"தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி" என்று சிவபெருமானை அடியார்கள் போற்றி வணங்குவர். இன்றைய காலக்கட்டத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு ஆன்மீக ஈடுபாடு அவசியம் தேவை.

மக்கள் முன்பை விட தற்போது அதிகமாகவே ஆலயங்களுக்கு செல்வதும், குறிப்பாக பிரதோஷ பூஜையில் கலந்து கொள்வதும் சிவபெருமானை வழிபடுவதுமாக உள்ளனர். இது ஒரு நல்ல மாற்றமே. சிவனை நினைத்து விரதமிருப்பது அவர்களுக்கு வாழ்வில் சிறப்பான பலனையும் முன்னேற்றத்தையும் தருவதால் பூஜையில் கலந்துகொள்கின்றனர். ஆனால் அவர்கள் பிரதோஷம் பற்றிய அறியாத விவரங்களைத் தெரிந்து கொண்டால் மேலும் பயன்பெறலாம்.

அந்த வகையில் வரம் வெளியீடாக டி.செல்வராஜ் என்பவர் எழுதிய "பிரதோஷம் சகல தகவல்களுடன்" என்ற நூல் பயனுள்ளது என்று நாம் கூறலாம்.

பிரதோஷம்
webdunia photoWD
இதில் சிவபெருமானைக் குறித்த தகவல்களைத் தொகுத்து தந்துள்ளார். குறிப்பாக பிரதோஷ காலத்தின் நேரமும் நாட்களும், பிரதோஷம் என்றால் என்ன? என்று அதன் விளக்கத்தையும் தெளிவாகவும் அனைவருக்கும் புரியும் வகையிலும் கொடுத்துள்ள நடை சிறப்பாக உள்ளது.

அடேங்கப்பா! பிரதோஷத்தில் இத்தனை வகைகளா! என படிப்பவர்கள் ஆச்சரியப்படும் அளவில் பல வகைகள் பற்றிய விவரத்தைத் தந்துள்ளார்.

பிரதோஷம் தோன்றிய வரலாற்றை கதையாக சொல்லிய விதம் நன்று. பிரதோஷம் பற்றிய தெரியாத பல தகவல்கள் இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ளன.

சிவபெருமானுக்கு அனுஷ்டிக்க வேண்டிய 9 விரதங்கள் பற்றியும் மிகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரதோஷத்தின் விரத பலன்கள் பற்றியும், சிவபெருமானுக்கு சூட்டக்கூடிய மலர்கள், பிரதோஷ நேரத்தின்போது படிக்க வேண்டிய பாராயண நூல்கள், நிவேதனங்கள், சிவபெருமானால் நந்திக்கு கிடைத்த சிறப்பு அந்தஸ்து பற்றியும், பிரதோஷத்தின்போது பக்தர்கள் பிறைவலம் வருவது, சிவபெருமான் ஆடிய 7 வகை நடனங்கள், சிவலிங்கம் பற்றிய சுவாரஸ்யமான கதைகள், நமச்சிவாயத்தின் சிறப்பு, பிரதோஷ வரலாற்றுடன் தொடர்புடைய தலமான சுருட்டப்பள்ளி சுவாரஸ்யமான பல பயனுள்ள தகவல்களையும் கொடுத்துள்ளார் நூலாசிரியர் செல்வராஜ்.

இறுதியில் எல்லா சிறப்பும் தரும் சிவபெருமான் பாடல், நவக்கிரக் கோளாறுகளை நீக்கும் கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பில்வாஷ்டகம், பிரதோஷ நந்தி பாடல் ஆகியவையும் இடம்பெற்றுள்ளது.

மொத்தத்தில் சிவ பக்தர்கள் வாங்கி படிக்க வேண்டிய பயனுள்ள, தரமான புத்தகம். சிவ பக்தர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தலாம்.
மேலும்
புரட்டாசி வெயிலில் புல் பூண்டும் கருகும்!
பரிகாரம் ஒரு வடிகாலே : ஜோதிட ரத்னா வித்யாதரன்!
சிம்மச் சனி ஆசியாவை ஆட்டிப் படைக்கும்!
அணு சக்தி ஒப்பந்தத்தால் ஆட்சி கவிழும் : ஜோதிட கணிப்பு!
இந்தியா குடிசைகளில் வாழ்கிறது
சனிப் பெயர்ச்சி : பொதுப் பலன்கள்!