முதன்மை பக்கம்  ஆன்மிகம் > ஆன்மிகம் > கட்டுரைகள்
 
புரட்டாசி வெயிலில் புல் பூண்டும் கருகும்!
Webdunia
“சித்திரைக்கும் உக்கிரம் புனிதப் புரட்டாசி” என்று சித்திரை மாதத்திற்கு இணையாக புரட்டாசி மாதத்தில் வெயிலின் கொடுமை அதிகமாகயிருக்கும் என்று கூறுகிறார் ஜோதிட ஆய்வாளர் கலிய. இரவிச்சந்திரன்.

“ஐப்பசியில் அடை மழ” என்பதை கேள்விப் பட்டுள்ள நமக்கு, அதற்கு முந்தய மாதமான புரட்டாசியில் வெப்பம் தகிப்பதேன் என்பது புரியாத புதிராகத்தான் இருந்தது. அது ஏன் என்று விளக்குகிறார் இரவிச்சந்திரன்.

சிவபெருமானின் காரகத்துவம் பொருந்திய சூரியன் இராசி மண்டலத்தில் மகர சங்கராந்தி தை 1 ஆம் தேதி உத்ராயணப் பிரவேசத்தை உத்திராட நட்சத்திரம் 2 ஆம் பாதத்தில் தொடங்கி (அதாவது பூமத்திய ரேகையிலிருந்து மகர ரேகைக்கு பயணம்) முறையே மகரம், கும்பம், மீனம் வழியாக சென்று மேஷ ராசியில் நிலைகொண்டு திரும்பும் காலம் (சித்திரை மாதம்) உக்கிகாலமாக இருக்கும்.

மகர ரேகையிலிருந்து ராசி மண்டலத்தின் ஆரம்பமான மேஷ ராசி 0 டிகிரி பாகையிலிருந்து மீண்டும் கடக ரேகை நோக்கி தட்சினாயண பயணத்தை தொடங்கும் காலம் இது. மேஷம் சூரியனுக்கு உச்ச வீடு ஆதலால் சூரியன் (கதிர் வீச்சு) பூமியை நோக்கும் பார்வை கொடிதாகவேயிருக்கும். இதில் மேஷத்திற்கும், ரிஷபத்திற்கும் இடைப்பட்ட பகுதி பரணி, கிருத்திகநட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்யும் 21 நாட்கள் (அக்னி நட்சத்திரம்) மிகவும் உஷ்ணமாகயிருக்கும்.

பின்பு ரிஷபம், மிதுனம் வழியாக பயணித்து (பூமத்திய ரேகை) கடக ராசி புனர்பூசம் 4 ஆம் பாதம் (ஆடி மாதம் முதல் தேதி) வழியாக ஆவனி 1 முதல் 31 வரை சிம்மத்தில் சஞ்சரிக்கும். இது சூரியனுக்கு சொந்த வீடு. இந்த சமயமும் ஓரளவு வெப்பமிருக்கும். பின்பு புரட்டாசி மாதம் 1 முதல் கன்னியில் சஞ்சாரத்தை தொடங்கும். இந்த சமயம் சூரியனுடன் மகா விஷ்ணுவின் காரகத்துவம் வாய்ந்த புதனும் சூரியனுடன் சேர்ந்தே சஞ்சரிக்கும்.
  1 | 2  >> 
மேலும்
பரிகாரம் ஒரு வடிகாலே : ஜோதிட ரத்னா வித்யாதரன்!
சிம்மச் சனி ஆசியாவை ஆட்டிப் படைக்கும்!
அணு சக்தி ஒப்பந்தத்தால் ஆட்சி கவிழும் : ஜோதிட கணிப்பு!
இந்தியா குடிசைகளில் வாழ்கிறது
சனிப் பெயர்ச்சி : பொதுப் பலன்கள்!
சனிப் பெயர்ச்சிப் பலன்கள்!