முதன்மை பக்கம்  ஆன்மிகம் > ஆன்மிகம் > கட்டுரைகள்
 
சனிப் பெயர்ச்சி : பொதுப் பலன்கள்!
ஜோதிட ரத்னா டாக்டர கே.பி. வித்யாதரன்
Webdunia
2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிகழவுள்ள சனிப் பெயர்ச்சியால் நாட்டிலும், உலக நாடுகளிலும் என்னென்ன மாற்றங்கள், பாதிப்புகள் ஏற்படும் என்று ஜோதிட ரத்னா டாக்டர கே.பி. வித்யாதரன் கணித்துள்ளார்!

webdunia photoFILE
நிகழும் சர்வஜித்து ஆண்டு ஆடி 20 ஆம் நாள் (05.08.2007) ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ணபட்சம் சப்தமி திதி, அசுவினி நட்சத்திரம், சூலம் நாம யோகம், பவம் நாம கரணம் கூடிய நேத்திரம், ஜீவன் மற்றும் சித்தயோகம் நிறைந்த நன்னாளில், செவ்வாய் ஓரையில், கதிருதய நேரம் உட்பட நண்பகல் மணி 12.09க்கு, பஞ்ச பட்சியில் வல்லூறின் வலிமை பொருந்திய வேளையில் கடக ராசியிலிருந்து சிம்ம ராசியின் சிம்மாசனத்தில் சனி பகவான் சென்று அமர்கிறார்.

05.08.2007 முதல் 25.09.2009 முடிய உள்ள காலம் முழுவதும் சனி பகவான் சிம்ம ராசியில் இருந்து கொண்டு தனது சீரிய கதிர்களைச் செலுத்துவார்.

05.08.2007 முதல் 05.08.2008 முடிய மகம் நட்சத்திரத்திலும்
16.08.2008 முதல் 29.08.2009 முடிய பூரம் நட்சத்திரத்திலும்
30.08.2009 முதல் 25.09.2009 முடிய உத்திரம் நட்சத்திரத்திலும் சனி பகவான் சஞ்சாரம் செய்வார்.

25.12.2007 முதல் 18.3.2008 முடிய மற்றும் 9.1.2009 முதல் 19.5.2008 முடிய உள்ள காலகட்டங்களில் சனி பகவான் வக்கிர கதியில் செல்வார்.

உலகெங்கும் அதிரடி மாற்றங்களை இந்த சிம்மச் சனி ஏற்படுத்துவார். தொலை தொடர்புத் துறை அசுர வளர்ச்சியடையும். கிராம மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்கும். அவர்களின் அடிப்படை வசதிகளும் பெருகும். பழமையான வைத்திய முறையை மக்கள் அதிகம் பின்பற்றுவார்கள். புதிய கோள்கள், நட்சத்திரங்கள் கண்டறியப்படும். நவகிரகங்களில் சூரியனின் உட்கருவின் இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்படும். இந்தியாவின் அண்டை நாடுகள் வலுவிலக்கும். உலகெங்கும் வாழும் இந்தியர்களின் தனித்திறமைகள் அதிகரிக்கும். பெரிய பதவிகளில் அமர்வார்கள். மறைமுக மதப்போர் மூளும்.நீரிழிவு நோய், பால்வினை நோய், புற்று நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஏழை, எளிய மக்கள் எங்கும் வலுவடைவார்கள். பணம் படைத்தவர்கள் தங்களது சொத்துக்களைக் காப்பாற்றிக்கொள்ள அதிகம் போராட வேண்டி வரும். அகிம்சை வழியில் செல்பவர்களுக்கு மக்கள் ஆதரவு கூடும். அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் வெகுண்டு எழுவார்கள். போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் அதிகரிக்கும். நாட்டை ஆள்பவர்கள் கடுமையான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். பல பிரபலங்களின் அந்தரங்கம் வெளிப்படும். முறையற்ற புணர்ச்சிகள் அதிகரிக்கும். பலர் வக்கிர புத்தியுடன் செயல்படுவார்கள்.
  1 | 2  >> 
மேலும்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள்!
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - மீனம்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - கும்பம்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - மகரம்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - தனுசு
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - விருச்சிகம்