கனவுக்கும், நமது வாழ்க்கைக்கும், எந்த தொடர்பும் இல்லை என்று, எல்லோரும் கூறுவார்கள். ஆனால், இங்கு, ஒரு கனவுதான், ஒருவரின் வாழ்க்கையையே, மாற்றியுள்ளது என்று கூறினால், நீங்கள் நம்புவீர்களா?
இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில், மத்தியப் பிரதேச மாநிலம், மனாசா என்ற சிறிய கிராமத்தில், கனவினால் தனது வாழ்க்கையே மாறிய, நிஜத்தை உங்களுக்குக் கூறுகிறோம்.
பபிதா, அந்த கிராமத்துப் பெண். பிறக்கும்போதே, உடல் ஊனமுற்றக் குழந்தையாக பிறந்தாள். கை, கால்களை அசைக்கக் கூட முடியாத நிலை. மற்ற உறுப்புகளும் கூட, இவளது அசைவுக்கு, அவ்வளவாக செவி சாய்ப்பதில்லை.
உட்காரக் கூட முடியாத நிலையில் நடப்பது எங்கே... தனது வாழ்க்கையை, படுக்கையில், படுத்தபடியே கழித்துக் கொண்டிருந்தாள்.
இளம் வயதை, நெருங்கத் தொடங்கியிருந்த, பபிதாவிற்கு, ஒரு நாள் இரவில் கனவு வந்தது. கனவில், பாபா ராம்தேவ்ஜி தோன்றி, எழுந்திரு, நட, உன் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவு, என்று கூறிவிட்டு மறைந்தார். ராஜஸ்தானில் புகழ்பெற்ற துறவியாவார் ராம்தேவ்ஜி.
இந்த கனவைக் கண்டதும், திடுக்கிட்டு எழுந்த பபிதா, தனது கால்களை அசைக்க முடிவதைக் கண்டாள். இப்போதோ, அவள், அவளது வேலைகளை செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், இயலாதவர்களுக்கும் உதவி செய்கிறாள்.
பபிதாவிடம் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்த விஜய் என்பவர் நம்மிடம் பேசுகையில், எனக்கு கையில் அதிகமான வலி இருந்தது. பபிதாவைப் பற்றிக் கேள்விப்பட்டு இங்கு வந்தேன். பபிதாவின் சிகிச்சையால் தற்போது குணமடைந்து வருகிறேன். மசாஜ் சிகிச்சை செய்து கொள்வதற்காக, தினமும் வந்து கொண்டிருக்கிறேன் என்று கூறுகிறார்.
|