பக்தர்களின் அதீத அன்பும், பக்தியும் கடவுளையே கட்டிப்போடும் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் நாம் பார்க்கவிருக்கும் கேவ்தாஸ்வாமி கால பைரவநாதர் கோயிலில், பக்தர்கள் கடவுளை சங்கிலியால் கட்டிப்போடுகின்றனர்.
இந்த கோயில் ஷாஜாபுர் மாவட்டத்தில் உள்ள மால்வா-ஆகர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
கோயிலில் அமைந்துள்ள காலபைரவ நாதரின் மூலவர் சிலை பூஜை செய்யப்பட்டு பின்னர் இரும்புச் சங்கிலியால் கட்டப்படுகிறது.
இந்த கோயிலை 1481ஆம் ஆண்டு ஜல ராஜ்புத் என்ற மன்னர் நிறுவியுள்ளார். கோயிலைச் சுற்றித்தான் தனது சாம்ராஜ்யத்தை நிறுவினார். பிறகு வந்த ராஜ் புத்திரர்கள் பலரும் இப்பகுதியிலேயே வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டும் ராஜஸ்தானிற்கு குடிபெயர்ந்துவிட்டனர்.
இந்த கோயிலைச் சுற்றி வாழ்ந்து வந்த ராஜ்புத்திர சமூகத்தினர், காலபைரவ ளநாத் கடவுள் விரும்பத்தகாத காரியங்களில் ஈடுபடுவதாகக் கருதினர்.
குழந்தை வடிவில் வந்து வீடுகளில் இருக்கும் இனிப்புகளை திருடிச் செல்வதும், சில சமயங்களில் வீட்டில் இருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளை அடிப்பதுமாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும், மதுபானத்திற்கு அடிமையாகி பொதுமக்களுக்கு துன்பம் ஏற்படுத்துவது அதிகரித்தது. இதனால் பொதுமக்களுக்கு கடவுள் மீது அச்சம் ஏற்பட்டது.
|