நம்பினால் நம்புங்கள் தொடரில் இந்த வாரம் உங்களுக்கு மறைந்தும் மறையாமல் வாழ்ந்துவரும் ஒரு வீரரை அறிமுகப்படுத்துகிறோம்.
மத்தியப் பிரதேச மாநிலம் மோவ் எனும் பகுதியில் வாழ்ந்து வருபவர்களுக்கு இன்றளவும் அவர் வாழ்ந்து வருகிறார்.
டாண்டியா பீல் என்பவரைப் பற்றிய கதை இது.
இந்தியாவின் ராபின் ஹூட் என்றழைக்கப்பட்ட தாண்டியா பீல், இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது வெள்ளையர்களை எதிர்த்துக் கடுமையாகப் போராடினார்.
மத்தியப் பிரதேசத்தின் மோவ் என்றழைக்கப்படும் மால்வா பகுதியில் இருந்து சாத்பூரா மலைத் தொடர்களில் உள்ள ஜால்காவ் வரை அவர் முடிசூடா மன்னராக இருந்துள்ளார்.
பிரிட்டிஷ்காரர்களிடம் கொள்ளையடித்து அதனை ஏழை மக்களுக்கும் மழைவாழ் மக்களுக்கும் டாண்டியா பீல் பகிர்ந்தளித்து அவர்களின் வறுமையைப் போக்கியுள்ளார்.
டாண்டியா பீலைப் பிடிப்பதற்கு உதவி செய்தால் பெரும் சன்மானம் கிடைக்கும் என்று வெள்ளையர்கள் அறிவித்தும் அவரைப் பிடிக்க முடியவில்லை. அவருக்குச் சில அதிசயச் சக்திகள் இருந்ததா அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
|